காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற ஜனாதிபதிக்கு நேர்ந்த கதி! தெறித்து வாகனத்துடன் தப்பியோடிய பரபரப்பு வீடியோ
அர்ஜென்டினாவின் Patagonia பிராந்தியத்தில் அந்நாட்டு ஜனாதிபதி Alberto Fernández சென்ற மினி பஸ்ஸை போராட்டகாரர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு மாகாணமான Chubut-ல் உள்ள சமூக மையத்தில் இருந்து Fernández வெளியே வந்த போது, அவரை சுற்றி கூடிய போராட்டகாரர்கள் கற்களை வீசியும், வாகனத்தையும் சரமாரியாக தாக்கினர்.
அப்பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஒருவர் உயரிழிந்தார் மற்றும் பலர் காயமடைந்த நிலையில், காட்டுத்தீயால் பேரழிவிற்குள்ளான பகுதியை நேரில் பார்க்க வருகை தந்த ஜனாதிபதியை போராட்டகாரர்கள் தாக்க முயன்றனர்.
Chubut-ல் சுரங்க பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிரப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டகாரர்கள் ஜனாதிபதியை முற்றுகையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Dozens of protesters kicked, threw rocks and broke the windows of the minibus carrying Argentinian President Alberto Fernandez on Saturday during his visit to the Patagonia region devastated by forest fires. A local newspaper says protestors were angry over mining projects pic.twitter.com/a11eNQh1kO
— TRT World (@trtworld) March 14, 2021
தங்கம், வெள்ளி மற்றும் யுரேனியம் நிறைந்த பிராந்தியத்தில் பெரிய அளவிலான சுரங்க திட்டங்களை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்ற அரசாங்க முன்மொழிந்ததால் போராட்டகாரர்கள் கோபமடைந்ததாக உள்ளூர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
Un grupo de manifestantes atacó este sábado con patadas y piedrazos la camioneta en la que viajaba Alberto Fernández durante su visita a la provincia de Chubut, afectada por los incendios forestales pic.twitter.com/zjq2M5fIBv
— RT en Español (@ActualidadRT) March 14, 2021
வன்முறை குறித்து கருத்து தெரிவத்த ஜனாதிபதி Fernández, இது Chubut அல்லது அர்ஜென்டினா முழுவதும் எந்தவொரு ஆதரவையும் பெறாத ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களின் வேலை என்று தான் நம்புவதாகக் கூறினார்.