செல்லப்பிராணிகளை சமைத்து உண்ணும் அவலம்: ஊரடங்கால் விழிபிதுங்கும் ஒரு நகரம்
சீனாவின் டோங்குவா நகரம் கொரோனா பெருந்தொற்றால் மிக ஆபத்தான நிலையில் சிக்கியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் காரணமாக டோங்குவா நகரம் முற்றிலுமாக தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
திங்களன்று அதிகாரிகள் மூன்றாவது முறையாக பெருந்திரள் கொரோனா பரிசோதனைக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
சீனாவில் மிகப்பெரிய அளவில் வைரஸ் பாதித்த இடங்களில் இந்த நகரம் ஒன்றாகும், செவ்வாயன்று 202 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 400,000 மக்களும் தற்போது கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, குடியிருப்பைவிட்டு வெளியே செல்லாமல் இருக்க, அரசு அதிகாரிகளே குடியிருப்புகளுக்கு முன்பு வேலி அமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பல குடியிருப்புகளில் ஜன்னல்களில் இருந்து பசிக்கு ஏதாவது சாப்பிட தாருங்கள் என்ற அழுகுரல்களே அதிகம் ஒலிப்பதாக ஜேர்மன் செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வெளியானாலும், அரசின் கடும்போக்கு நடவடிக்கை காரணமாக சில மணி நேரம் மட்டுமே அவை இணையத்தில் காணப்படுகிறது.
பசி காரணமாக, பல குடும்பங்கள் தங்கள் செல்லப் பிராணிகளை கொன்று தின்னும் கொடூர நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.
மட்டுமின்றி, பொதுமக்கள் சிலர் உணவு பண்டங்களை பரிமாற்றம் செய்து கொண்டும் ஊரடங்கை சமாளிப்பதாக தெரிய வந்துள்ளது.


