ரயில் பெட்டி தீ விபத்து! கண்கலங்கியபடி தமிழக அமைச்சர் பி.டி.ஆர் -ன் நெகிழ்ச்சி செயல்
தமிழக மாவட்டம், மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சொந்த ஊருக்கு செல்ல உதவிய தமிழக அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜனின் செயல் பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது.
ரயிலில் தீ விபத்து
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி லக்னோ - ராமேஸ்வரம் சுற்றுலா ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, ரயிலில் சட்டவிரோதமாக சமையல் சிலிண்டர் மூலம் தேநீர் சமைக்க முயன்ற போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 7 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கண்கலங்கிய அமைச்சர்
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன், அவற்றை உத்தர பிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்தார்.
இது குறித்த வழிமுறையை, மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், அரசு மருத்துவமனை டீன் ஆகியோருக்கு அமைச்சர் கூறினார். மேலும் அவர், உயிரிழந்தவர்களின் உறவினர்களை அவர்களது சொந்த ஊருக்கு வழியனுப்பி வைக்கவும் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவர், உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து கண்கலங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. மேலும், அவர்கள் ஊர் திரும்புவதற்கு தேவையான உதவிகள் செய்து கொடுத்த அமைச்சரின் மனிதாபிமான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |