வீடியோ காலில் பிஸியாக இருந்த ஓட்டுநரால் நடைமேடையில் ஏறிய ரயில்! பரபரப்பான சிசிடிவி காட்சிகள்
இந்திய மாநிலம், உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் மின்சார ரயில் விபத்திற்கு, வீடியோ காலில் ஓட்டுநர் பேசியதே காரணம் என தெரியவந்துள்ளது.
ரயில் விபத்து
உத்தரப் பிரதேச மாநிலம், சாகுர் பாஸ்தி ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் ஒன்று நேற்று முன்தினம் இரவு 10.49 மணிக்கு மதுரா ரயில் நிலையத்துக்கு சென்றது.
அப்போது, அங்கு ரயிலின் எஞ்சின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் இருந்து நடைமேடை மீது ஏறியது. இதனால், நடைமேடையில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்து ஓடினர்.
மேலும், ரயிலில் இருந்த பயணிகள் பதறிப்போய் வேகமாய் இறங்கினர். இதனால், மதுரா ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்பு, ரயில்வே ஆதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
வீடியோ கால் பேசிய ஓட்டுநர்
இந்த ரயில் விபத்திற்கான காரணம் குறித்து, சிசிடிவி காட்சிகளை ரயில்வே ஆதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, ரயில் ஓட்டுநர் அலட்சியமாக வீடியோ காலில் பேசியது தெரியவந்துள்ளது.
Footage allegedly from inside the EMU cabin at Mathura station after the incident where the train climbed onto platform! One staff, likely the locopilot, exits. Another appears busy in a video call. #Mathura #Mathuraemu #CCTVfootage #CCTV #TrainAccident #EMU #IndianRailways pic.twitter.com/P8hjzNJvLt
— Aditya (@rjadi28) September 28, 2023
இதனைத்தொடர்ந்து, ரயில் ஓட்டுநரை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்தனர். தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |