தனி அலுவலகம், கார் கேட்டு அடம்பிடித்த பயிற்சி IAS அதிகாரி.., கடைசியில் அரசு எடுத்த அதிரடி முடிவு
பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் பெண் அதிகாரி ஒருவர் தனக்கு சில வசதிகள் வேண்டும் என்று கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார்.
பயிற்சி IAS அதிகாரி
இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் பூஜா கேட்கர்.
இவர் தன்னுடைய பயிற்சியின் போது தனி அலுவலகம், காருக்கு வி.ஐ.பி எண், தனி தங்குமிடம் மற்றும் உதவியாளர் வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், பயிற்சி அதிகாரிகளுக்கு இதுபோன்ற வசதிகள் வழங்கப்படுவதில்லை என்று தெரிந்திருந்தும் அவர் நச்சரித்ததாக தெரிகிறது.
இதனிடையே, புனே கூடுதல் கலெக்டர் அஜய் மோரே வெளியில் சென்ற போது அவருடைய அறையை பூஜா கேட்கர் ஆக்கிரமித்து கொண்டார்.
அதோடு, அறையில் இருந்த அவரது பெயர் பலகையை எடுத்துவிட்டு தன்னுடைய பெயர் பலகையை வைத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஒப்பந்ததாரர் கொடுத்த விலையுயர்ந்த சொகுசு காரில் விதியை மீறி சைரன் வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவருடைய செயல்கள் எல்லையை மீறி சென்றதால் உயரதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளன.
இதையடுத்து பூஜா கேட்கர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, வாசிம் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சியை முடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |