தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்! அனைத்து பயணிகளும் பலி: அதிர வைக்கும் புகைப்படம்
லெபனானில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் பெய்ரூட்டின் வடக்கே உள்ள கோஸ்டா நகரில் சிறிய விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் விமான பயிற்சி நிறுவனமான ஓபன் ஸ்கை ஏவியேஷனுக்கு சொந்தமானது எனவும், அது உள்ளூர் சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் விமானி, இரண்டு பயணிகள் என 3 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 3 பேரும் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் விமான நிலையத்திற்கு விரைந்துள்ளார், விரைவில் அதிகாரப்பூர் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
أنباء عن سقوط طائرة تدريب للجيش اللبناني في منطقة عين ورقة الواقعة بين غسطا ومعراب.
— Lebanon Now (@lebanonnownews) July 8, 2021
وتفيد المعلومات ان الطائرة تستعمل للسياحة الداخلية تابعة لشركة open sky وعلى متنها شقيقين من آل موسى، ولا معلومات عنهما حتى الساعة ! pic.twitter.com/GFt5XZW26W
விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.