குப்பைகளுடன் ஜனாதிபதி மாளிகையில் தரையிறங்கிய ராட்சத பலூன்: அடங்காத வடகொரியா
தென் கொரிய ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் குப்பைகளுடன் வட கொரிய ராட்சத பலூன் ஒன்று தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராட்சத பலூன்களில்
உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், அதில் ஜனாதிபதி யூன் சுக் யோல் மற்றும் அவரது மனைவியை கேலி செய்யும் பிரச்சார துண்டு பிரசுரங்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக தென் கொரியாவில் உள்ள சமூக ஆர்வலர்கள் கடந்த பல ஆண்டுகளாக துண்டு பிரசுரங்கள், அமெரிக்க பணத்தாள்கள், பாடல் தொகுப்புகள் அல்லது நாடங்கள் பதிவு செய்யப்பட்ட மின் பொருட்கள் உள்ளிட்டவைகளை வட கொரியாவுக்கு பலூன்கள் ஊடாக அணுப்பி வந்துள்ளனர்.
ஆனால் தற்போது அதற்கு பதிலடியாக ராட்சத பலூன்களில் குப்பைகளுடன் தென் கொரியாவுக்கு அனுப்பி வருகிறது வடகொரியா.
ஜனாதிபதி மாளிகை
இந்த நிலையிலேயே பலூன் ஒன்று அந்தரத்தில் வெடிக்க, அதில் இருந்த குப்பைகள் அனைத்தும் Yongsan அலுவலகப் பகுதியில் சிதறிக்கிடந்தது என ஜனாதிபதி மாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றும் உறுதி செய்துள்ளனர். உண்மையில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியில் வடகொரியா குப்பைகளுடன் பலூன்களை அனுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதமும் இது போன்ற சம்பவம் ஒன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |