ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பறக்கிறீர்களா? நீங்கள் இனி இந்த பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்பவர்கள், இந்தியாவிலிருந்து உங்கள் செக்-இன் லக்கேஜில் இனி நெய், ஊறுகாய் மற்றும் பலவற்றை எடுத்துச் செல்ல முடியாது.
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். விடுமுறை காலம் தொடங்கும் போது இது இரட்டிப்பாகும். இதற்கெல்லாம் காரணம் சுற்றுலா மற்றும் சிறந்த வேலைகள்தான்.
சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு வளைகுடாவுக்குத் திரும்பும் போது, வெளிநாட்டில் இருப்பவர்கள் ஊறுகாய், நெய், மற்ற எல்லாவற்றையுமே பேக் செய்வார்கள். அவை வெறும் உணவுப் பொருட்கள் மட்டுமல்ல, குடும்ப உறுப்பினர்களின் அன்பு மற்றும் அக்கறையின் அடையாளமாக நமக்குத் தெரியும். அதனால் வெளிநாட்டவர்கள் அதைத் தங்களுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எடுத்துச் செல்வதை உறுதி செய்கிறார்கள். ஆனால் இப்போதைக்கு, அவர்கள் அத்தகைய பொருட்களுடன் செக்-இன் செய்ய அனுமதிக்கப்படவில்லை, அதைமீறி எடுத்துச்சென்றால் பிரச்சனைகள் தான் ஏற்படும்.
தொலைதூரப் பயணம் மற்றும் வீட்டை விட்டு வெளியேறும் போது, பல வெளிநாட்டினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள்.
இதன்மூலம், செக்-இன் பைகளில் வைக்க முடியாத, விமானப் பயணத்தின் போது யு.ஏ.இ.க்கு எடுத்துச் செல்ல முடியாத தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்த தகவலை விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அதில் ஊறுகாய் மற்றும் நெய் அடங்கும். தடை செய்யப்பட்ட பொருட்கள் தீப்பெட்டிகள், பட்டாசுகள், காய்ந்த தேங்காய், பெயிண்ட், கற்பூரம், எண்ணெய் உணவு பொருட்கள், பவர் பேங்க்கள், இ-சிகரெட்டுகள், லைட்டர்கள் மற்றும் ஸ்ப்ரேக்கள் அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Piant, Dry coconut, Camphor, Ghee, Pickles, Oily food items, e-cigarettes, Lighters, Power banks, Spray bottles, Flying To UAE, Food items restricted