இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் #BSRO ... நெட்டிசன்கள் வைத்த புதிய பெயர்
இந்தியா என்பது பாரத் என மாற்றப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை நெட்டிசன்கள் இணையத்தில் பேசி வருகின்றனர்.
#BSRO
சமூக வலைதளங்களில் அவ்வபோது பரபரப்பாக பேசப்படும் விஷயங்கள் அனைத்தும் ட்ரெண்டாகும். அந்த வகையில் தற்போது #BSRO என்று ட்ரெண்டாகி வருகிறது. தற்போது, இந்தியா என்ற பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதற்கு ரிசர்வ் பேங்க் உள்பட அனைத்திற்கும் இந்தியா என்ற பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டால் என்னவாகும் என்பதை நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
அதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) என்பதை மாற்றம் செய்தால் BSRO என்று கற்பனையாக நினைத்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
If you know you know!?#BSRO #Bharat #भारत pic.twitter.com/JEMMWeIciT
— Didi For PM (@DidiForPM) September 5, 2023
இந்தியா என்பது பாரத்
இந்தியா என்ற பெயரை பாரத் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஜி 20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத்தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |