திருகோணமலை- கொழும்பு இரவு நேர ரயில் சேவை தொடக்கம்: முன்வைக்கப்படும் கோரிக்கை
கொழும்பு- திருகோணமலைக்கான இரவு நேர ரயில் சேவை நீண்ட காலமாக தடைப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
அறிவிப்பின் படி, ரயில் சேவையானது 20/01/2026 இரவு திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டது.
கொழும்பு- திருகோணமலைக்கான இரவு நேர ரயில் சேவை கடந்த ஓரிரு மாதங்களாக தடைப்பட்டு இருந்ததை அடுத்து, தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு இருப்பது பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவை சுலபமாக்கியுள்ளது.

அரசு அதிகாரிகள் கொழும்பு நோக்கி தங்கள் கடமை நிமித்தம் ஆசனப் பதிவுகளை மேற்கொண்டு அதிகமாக இரவு நேர சேவையில் ஈடுபடுகின்றனர்.
அதைப்போல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் பொறுத்து ரயில் சேவை அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட பல ரயில் பாதைகளில் இரவு நேர தெரு மின் விளக்குகள் இல்லாதது விபத்து ஏற்பட காரணமாக அமையலாம்.
எனவே இது தொடர்பாக தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளருக்கு பல முறை தெரியப்படுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆகவே இரவு நேர ரயில் சேவையை தொடங்கும் போது ரயில்கள் கடந்து செல்லும் சாலை பகுதிகளில் மின் விளக்குகள் இருப்பதை தாமதமின்றி செயல்படுத்துமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |