அமேசான் நதியில் அடித்துவரப்பட்ட பிரிட்ஜுக்குள் இருந்த மூவர்: நடந்தது என்ன?
அமேசான் நதியில் அடித்துவரப்பட்ட பிரிட்ஜுக்குள் மூன்று பேர் அமர்ந்து பயணித்த நிலையில், அவர்கள் மூவரும் கவிழ்ந்த படகு ஒன்றிலிருந்து தப்பியவர்கள் என தெரியவந்துள்ளது.
பிரேசில் கடற்படைவீரர்கள், அமேசான் நதியில் அடித்துவரப்பட்ட பிரிட்ஜ் ஒன்றில் மூன்று பேர் இருப்பதைக் கண்டு, அவர்களை மீட்டுள்ளனர்.
விசாரணையில், அவர்கள் மூன்று பேரும் மீனவர்கள் என்றும், அவர்களது மீன் பிடி படகு கவிழ்ந்ததால், மீன்களை வைக்க பயன்படுத்தப்படும் பிரிட்ஜ் ஒன்றில் ஏறி அமர்ந்துகொண்டதும், மூன்று மணி நேரமாக தண்ணீரில் தத்தளித்ததும் தெரியவந்தது.
மூன்று பேரையும் மீட்ட கடற்படையினர், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மூன்று பேரும் தற்போது நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

