இராணுவ விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்! 6 பேர் பலி
ஈராக்கில் இராணுவ விமான நிலையத்தின் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதல்
குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சிறிய இராணுவ விமான நிலையமான அர்பிட் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர்களுக்காக பயன்படுத்தப்படும் இந்த சிறிய விமான நிலையம், நாட்டின் வடகிழக்கில் உள்ள சுலைமானியா நகரின் கிழக்கே 50 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
AFP
உள்ளூர் அதிகாரி மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் இந்த ட்ரோன் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
இருவர் காயம்
மேலும் குர்திஷ் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்ததால், அவர்கள் பலத்த பாதுகாப்புடன் சுலைமானியாவில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
அத்துடன் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
EPA
ஈராக் குர்திஸ்தானின் துணைப் பிரதம அமைச்சர் குபாத் தலாபானி ட்ரோன் தாக்குதலைக் கண்டித்ததுடன், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க மத்திய அரசு அதிகாரிகளின் தலையீட்டைக் கோரினார்.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |