காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க துருப்புகளின் அட்டூழியம்... 3 பேர் பலி: சிதறி ஓடிய மக்களின் காணொளி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் முதன்மை விமான நிலையத்தில் பொதுமக்களை சிதறடிக்க அமெரிக்க துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதன் காணொளி வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் ஆட்சியை நீண்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். 2001ல் அமெரிக்க துருப்புகளால் முற்றாக வெளியேற்றப்பட்ட பின்னர் தாலிபான் அமைப்பு, பண பலம் மற்றும் ஆயுத பலத்துடன் மீண்டும் காபூல் நகரை கைப்பற்றி, ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை தங்கள் கைவசம் கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா, சுவிஸ், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்கள் மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றும் பணிகளை தொடர்ந்து குன்னெடுத்து வருகிறன்றனர்.
ஆனால் தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து, அப்பாவி பொதுமக்கள் நாட்டில் இருந்து வெளியேறும் நோக்கில் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளதுடன், பயணிகள் விமானங்களில் முண்டியடித்துள்ளனர்.
⚡ URGENT - #Afghanistan : Les forces américaines tirent en l'air à l'aéroport de #Kaboul, où une foule énorme a envahi le tarmac. #TalibanTerrorists #Kabul #Talibans #taliban #Islamisme #Islamistes pic.twitter.com/IV0N3qsZby
— FranceNews24 (@FranceNews24) August 16, 2021
இந்த நிலையில் அமெரிக்க துருப்புகள் பொதுமக்களை சிதறடிக்கும் நோக்கில் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
அதன் காணொளியும் வெளியாகியது. அதில் மக்கள் சிதறியோடும் காட்சிகளும் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், குறித்த துப்பாக்கிச் சூடில் மூவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் குறித்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.