ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாவதால் உக்ரைனுக்கு சிக்கல்: என்றாலும் வாழ்த்து தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்புக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துச் செய்திகள் வரத் துவங்கியுள்ளன.
உக்ரைன் ஜனாதிபதி முதல்...
ட்ரம்பின் வெற்றி உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, உக்ரைன் ரஷ்யப் போரில் அது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய உக்ரைன் போரில், அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கிறது. ஆனால், ட்ரம்ப் ஜனாதிபதியாவாரானால், அவர் போரை உடனடியாக முடிக்கத்தான் விரும்புவார்.
அப்படியானால், உக்ரைன், தனது நாட்டில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பல பகுதிகளை விட்டுக்கொடுக்க கட்டாயப்படுத்தப்படும் என ஏற்கனவே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சிக்கலான, கேள்விக்குறியான சூழலில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்புக்கு உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations to @realDonaldTrump on his impressive election victory!
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) November 6, 2024
I recall our great meeting with President Trump back in September, when we discussed in detail the Ukraine-U.S. strategic partnership, the Victory Plan, and ways to put an end to Russian aggression against…
அவர் மட்டுமல்ல, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானி, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் என உலகத்தலைவர்கள் பலர் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Prime Minister Benjamin Netanyahu:
— Prime Minister of Israel (@IsraeliPM) November 6, 2024
Dear Donald and Melania Trump,
Congratulations on history’s greatest comeback!
Your historic return to the White House offers a new beginning for America and a powerful recommitment to the great alliance between Israel and America.
A nome mio e del Governo italiano, le più sincere congratulazioni al Presidente eletto degli Stati Uniti, Donald #Trump.
— Giorgia Meloni (@GiorgiaMeloni) November 6, 2024
Italia e Stati Uniti sono Nazioni “sorelle”, legate da un’alleanza incrollabile, valori comuni e una storica amicizia.
È un legame strategico, che sono certa…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |