பணத்தை மட்டுமே பார்த்த பேராசை மாப்பிள்ளைகள்! வீட்டு வேலைக்காரரை திருமணம் செய்து கொண்ட கோடீஸ்வர பெண்
வீட்டு வேலைக்காரரை திருமணம் செய்து கொண்ட பணக்கார பெண்.
காதலுக்கு அந்தஸ்து வேண்டாம், நம்மை மதிப்பவராக நல்ல மனிதராக இருக்க வேண்டும் என நெகிழ்ச்சி.
காதலுக்கு அந்தஸ்து, பொருளாதார நிலை ஒப்பீடு போன்றவையெல்லாம் இல்லை என நிரூபித்துள்ளனர் பாகிஸ்தானை சேர்ந்த தம்பதி.
அன்னி என்ற பெண் செல்வ செழிப்புடன் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அவருக்கு பெற்றோர் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்த நிலையில் அவர் பேராசை பிடித்தவர் எனவும் தனது சொத்துக்களை மட்டுமே விரும்புகிறார் என்பதையும் புரிந்து கொண்டார், இதே போல மேலும் சில மாப்பிள்ளைகளும் அன்னியின் சொத்துக்கள் மீது மட்டுமே கண் வைத்தனர்.
இது குறித்து பெற்றோரிடம் கூறி திருமணத்தை நிறுத்தினார். இந்த நிலையில் அன்னி வீட்டிற்கு இஷாயா கில் என்ற இளைஞரை வீட்டு வேலைக்கு அவர் தந்தை சேர்த்தார்.
இதையடுத்து கில்லின் பழக்கவழக்கங்கள், நடத்தை அன்னியை ஈர்த்தது. சில மாதங்களில் அவர் மீது காதலில் விழுந்த அன்னி அதை கில்லிடம் சொன்னார்.
abp
நமக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி தன்னிடம் காதலை சொல்கிறாரே என ஒருகணம் நம்பமுடியாமல் அதிர்ச்சியடைந்த கில் அது குறித்து இரண்டு நாட்கள் யோசித்து பின்னர் சம்மதம் சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அன்னி கூறுகையில், என் காதல் பற்றி வீட்டில் சொன்னவுடன் என் தந்தை ஆதரித்த நிலையில் மற்றவர்கள் எதிர்த்தனர். பின்னர் அவர்கள் சம்மதித்தனர்,
இன்றைய உலகில் கில் போன்ற நல்லவர்கள் இருக்கிறார்களா என்பதே ஆச்சரியமாக உள்ளது. திருமணம் செய்து கொள்ளும்போது, ஒருவர் தனது பொருளாதார நிலையைப் பற்றி கவலைப்படாமல், நம் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உங்களை மதிக்கும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
odishatv

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.