ஈரான் அளித்த அந்த வாக்குறுதி... இராணுவ நடவடிக்கை தொடர்பில் புதிய முடிவெடுத்த ட்ரம்ப்
ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் மீது தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்ற வாக்குறுதியை அடுத்து, ட்ரம்ப் நிர்வாகம் புதிய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடவடிக்கை தொடரும்
ஈரானில் கடந்த 17 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவம் களமிறங்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஈரான் மீது இராணுவ நடவடிக்கை உறுதி என மிரட்டல் விடுத்து வந்த ட்ரம்ப், தற்போது ஈரான் நிர்வாகம் அளித்துள்ள வாக்குறுதியை அடுத்து, முடிவை மாற்றியுள்ளதாகவே கூறப்படுகிறது.
ஆனால், 17 நாட்களாக நீடித்த போராட்டத்தில், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 18,000 பேர்களும் ஆபத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது. ஈரான் விவகாரத்தில் இருந்து ட்ரம்பின் கவனம் விலகியதும், போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என்றே பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
கடந்த 17 நாட்களில் ஈரான் நிர்வாகம் எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றவில்லை. ஆனால், இந்த நிலை மிக விரைவாக மாறக்கூடும் என்றே அஞ்சுகின்றனர்.
ஈரானில் பொதுவாக முன்னெடுக்கப்படும் பொதுத் தூக்குத்தண்டனைகள் மூலம் நிறைவேற்றப்படும் மரணதண்டனைகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரைத் தொடர்ந்து உயர் தலைவர் அலி காமெனி மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளால் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
நார்வேயை சேர்ந்த ஈரான் மனித உரிமைகள் அமைப்பு, டிசம்பர் மாதத் தொடக்கம் வரை குறைந்தது 1,500 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

2024ல் மட்டும் 975 பேர்களுக்கு மரணத்தண்டனை நிறைவேற்றபப்ட்டுள்ளது என்றே ஈரான் மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது. ஆனால், ஈரானிய அதிகாரிகள் உண்மையான எண்ணிக்கைகளை வெளியிடுவதில்லை என்பதால், வெளியான எண்ணிக்கையும் உறுதி செய்யப்படவில்லை.
கடந்த 17 நாட்களில் ஈரான் முழுவதும் நடந்த போராட்டங்களின் போது குறைந்தது 18,434 பேர் கைது செய்யப்பட்டதாகவும், குறைந்தது 2,600 பேர் கொல்லப்பட்டதாகவும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் அளித்த வாக்குறுதி
ரகசியச் சிறைகளிலும் சித்திரவதைக்கூடங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட குறைந்தது பன்னிரண்டு சிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், கைதான எவரும் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்ற ஈரான் அரசாங்கத்தின் வாக்குறுதிகளை அமெரிக்க அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

தண்டனையிலிருந்து தப்பித்தவர்களில், கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குள் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட மாணவர் எர்ஃபான் சோல்தானியும் ஒருவர். ஈரான் அளித்த வாக்குறுதியை ட்ரம்ப் தனது Truth சமூக ஊடகத்திலும் வரவேற்றிருந்தார்.
26 வயதான Erfan Soltani கடந்த வியாழக்கிழமை தெஹ்ரானுக்கு மேற்கே உள்ள ஃபார்டிஸ் நகரில் கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அதிகாரிகள் எந்தக் கூடுதல் விவரங்களையும் தெரிவிக்காமல், அவரது மரண தண்டனை புதன்கிழமைக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள மற்ற போராட்டக்காரர்களுடன் சேர்ந்து, Soltani ஆட்சிக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றே அரசு ஊடகத்தில் செய்தி வெளியானது. ஆனால், Soltani போன்று பலர் மரணத்தண்டனையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாகவே அஞ்சப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |