இந்தியா - பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தியது நான் தான்: டிரம்ப் மீண்டும் கருத்து
இந்தியா -பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை நான் தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை நான் தான் தடுத்து நிறுத்தினேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், தெற்காசியாவில் அணு ஆயுத பலம் கொண்ட இரண்டு நாடுகள் இடையே வெடித்த மோதலை தான் தலையீட்டு தடுத்ததாகவும், இதனால் போர் மூளும் அபாயம் தவிர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இருவருடனும் நான் நெருக்கமான உறவை கொண்டுள்ளேன், இதனால் இரண்டு தரப்புகளையும் என்ன சமாதானப்படுத்த முடிந்தது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்தை டிரம்ப் பல பொது மேடைகளில் தெரிவித்து வந்தாலும், இந்தியா இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் தாக்குதல்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சில பயங்கரவாதிகள் ஏற்படுத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மே மாதம் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை முன்னெடுத்தது.
இது இந்தியா - பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய மோதலுக்கு தூண்டியது, ஆனால் பின்னர் 2 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் பதற்றம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |