ஒரே அறையில் ட்ரம்பும் புடினும்... பேரழிவிற்கான அறிகுறி: நிபுணர் ஒருவரின் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்யாவின் விளாடிமிர் புடினும் ஒரே அறையில் தனியாக சந்திப்பது என்பது கணிக்க முடியாதது மட்டுமல்ல பேராபத்தும் கூட என நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திகைப்பு மாறாமல்
கடந்த 2018ல் பின்லாந்தின் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்று ட்ரம்பும் புடினும் ஒரே அறையில் தனியாக விவாதித்தனர். அமெரிக்க-ரஷ்யா உறவுகளில் ஏற்பட்ட சரிவு, தேர்தல் தலையீடு குற்றச்சாட்டுகள் மற்றும் கிழக்கு உக்ரைனில் நடக்கும் போர் உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் இருவரும் விவாதித்துள்ளனர்.
ஆனால் விவாதம் முடித்து இரு தலைவர்களும் அறையை விட்டு வெளியேறிய நிலையில், புடினைப் பார்த்து திகைப்பு மாறாமல் ட்ரம்ப் காணப்பட்டார் என்றே கூறப்படுகிறது.
தேர்தல் தலையீடு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ட்ரம்ப், ரஷ்யாவிற்கு அந்த விவகாரத்தில் பங்கில்லை என புடின் தெரிவித்தார் என்றும், அதை நம்பாமல் இருக்க வேறு காரணங்கள் தமக்கில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ட்ரம்பின் செய்தியாளர்கள் சந்திப்பை நிறுத்த பல முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டதாக, அப்போதைய ஆலோசகர் Fiona Hill குறிப்பிட்டிருந்தார்.
அப்படியே நம்பிவிட்டு
ஆனால் தற்போதைய சூழலில் ட்ரம்பின் அரசியல் பார்வை வேறு என்றும், சந்திப்பிற்கு முன்பே இருவரும் நில பரிமாற்றம் பற்றி விவாதிக்க இருப்பதாக ட்ரம்ப் வெளிப்படையாகவே கூறியிருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.
மட்டுமின்றி, ரஷ்யா கூறும் தகவல்களை அப்படியே நம்பிவிட்டு தனி அறை கூட்டத்திலிருந்து ட்ரம்ப் மீண்டும் வெளிவரக்கூடும் என்று ஐரோப்பிய தலைவர்கள் அஞ்சுகிறார்கள்.
இந்த நிலையில், புதிய தாக்குதலைத் தொடங்க பயன்படுத்தக்கூடிய உக்ரைன் பிரதேசத்தை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுக்காது என்று ஜெலென்ஸ்கி அழுத்தமாக கூறிவருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |