ஐரோப்பாவின் போர் நிறுத்த திட்டம் நிராகரிப்பு: புடின் - டிரம்ப் இடையே ஒருமித்த கருத்து
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
டிரம்ப் - புடின் இடையே பேச்சுவார்த்தை
உக்ரைன் ரஷ்யா இடையிலான நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொலைபேசி வாயிலாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் முக்கிய பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார்.
சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்த இந்த தொலைபேசி உரையாடல் இருதரப்பிலும் நட்பு ரீதியாக நடந்ததாகவும், இந்த தொலைபேசி அழைப்பினை அமெரிக்காவே முன்னெடுத்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இன்று புளோரிடாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஐரோப்பாவின் முன்மொழிவை எதிர்த்த இரு நாட்டு தலைவர்கள்
டிரம்ப் - புடின் தொலைபேசி உரையாடலின் போது, உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கும் தற்காலிக போர் நிறுத்தம் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டதாக ரஷ்யாவின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் தற்காலிக போர் நிறுத்தம் என்பது இருதரப்பிலும் மோதலை தீர்ப்பதற்கு பதிலாக, மோதல் காலத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதில் டிரம்பும் புடினும் ஒருமித்த கருத்தை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் டான்பாஸ் விவகாரத்தில் உக்ரைன் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும், பிராந்தியத்தின் எதிர்காலத்தில் உக்ரைன் எந்தவொரு தாமதமும் இல்லாமல் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று இரண்டு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |