ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ட்ரம்ப்: அவரை எதிர்த்து போட்டியிடும் சொந்த கட்சியில் 8 பேர்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக சொந்த கட்சியில் 8 பேர் களமிறங்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்காவில் 2024ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் வெளியாக இன்னும் மாதங்கள் எஞ்சியிருக்கும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தாம் மீண்டும் களமிறங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
@AP
சிறப்பு விருந்தினர்கள், கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் ட்ரம்ப் தாம் போடியிட இருப்பதை செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இந்த நிலையில், குடியரசுக் கட்சியில் அவரை எதிர்த்து களமிறங்க பிரபலங்கள் பலர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த இடைத் தேர்தலில் போதிய ஆதரவு கிட்டாத நிலையில், ட்ரம்ப் போன்ற ஒருவரை மீண்டும் களமிறக்க குடியரசுக் கட்சி தயாராவதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
Nikki Haley ஜனாதிபதி தேர்தலில்
தற்போது ட்ரம்பை எதிர்த்து, குடியரசுக் கட்சியின் முன்னாள் துணை ஜனாதிபதி Mike Pence களமிறங்கக் கூடும் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. அத்துடன், புளோரிடா மாகாணத்தில் இடைத் தேர்தலில் வெற்றிவாகை சூடிய, ட்ரம்புக்கு அதிராக கருத்துகளை முன்வைக்கும் Ron DeSantis களமிறங்க இருக்கிறார்.
@getty
ஜனவரி 6ம் திகதி நடந்த களேபரங்களுக்கு ட்ரம்ப் மீது குற்றஞ்சாட்டும் முன்னாள் கரோலினா ஆளுநரான Nikki Haley ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னொருவர், ட்ரம்ப் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் Mike Pompeo மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி Dick Cheney-ன் மகளும் குடியரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினருமான Liz Cheney,
@getty
தென் கரோலினா செனட்டர் டிம் ஸ்காட், டொனால்டு ட்ரம்பின் முக்கிய விமர்சகரான Larry Hogan, Glenn Youngkin உள்ளிட்ட 8 பேர்கள் ட்ரம்புக்கு முதற்கட்ட நெருக்கடியை அளிப்பார்கள் எனவும், இவர்களில் மக்கள் ஆதரவை திரட்டும் நபர் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.