உக்ரைன் தொடர்பில் பிரித்தானியாவுக்கு ட்ரம்ப் விதித்துள்ள தடை
அமெரிக்க தரப்பிலிருந்து வரும் உளவுத்துறை தகவல்களை உக்ரைனுக்கு அளிக்க பிரித்தானியாவுக்கு தடை விதித்துள்ளார் ட்ரம்ப்.
பிரித்தானியாவுக்கு ட்ரம்ப் விதித்துள்ள தடை
உக்ரைனுக்கு அளித்துவரும் உதவிகளை நிறுத்திவரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அடுத்த கட்ட நடவடிக்கையாக, அமெரிக்க தரப்பிலிருந்து வரும் உளவுத்துறை தகவல்களை உக்ரைனுக்கு அளிக்க பிரித்தானியாவுக்கு தடை விதித்துள்ளார்.
உக்ரைனுக்கு அளித்துவந்த நிதி உதவிகளை ட்ரம்ப் நிறுத்தியதைத் தொடர்ந்து, இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் உக்ரைனுடைய ஆயுதங்கள் எல்லாம் செலவழிந்துபோகலாம் என்ற கவலை உருவாகியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ட்ரம்ப்.
அதன்படி, அமெரிக்க தரப்பிலிருந்து உக்ரைன் தொடர்பில் பிரித்தானியாவுக்கு அளிக்கப்படும் உளவுத்துறை தகவல்களை உக்ரைனுக்கு அளிக்கக்கூடாது என பிரித்தானிய உளவு ஏஜன்சிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், மூன்று ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா உக்ரைனை ஊடுருவிய நேரத்தில், பிரித்தானியாவும், அவுஸ்திரேலியா போன்ற மேற்கத்திய பாதுகாப்புக் கூட்டாளர் நாடுகளும் குறிப்பிடத்தக்க அளவில் பயனுள்ள தகவல்களை உக்ரைனுடன் பகிர்ந்துவந்தன.
ஆக, தற்போது உளவுத்துறை தகவல்களை பகிர தடை விதிக்கப்பட்டுள்ள விடயம் உக்ரைனுக்கு பெரிய அடியாக அமையும்.
ரஷ்யாவின் ஆக்ரோஷ தாக்குதல் தொடரும் நிலையில், உக்ரைன் தன்னைக் காத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள், இந்த தடையால் மேலும் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |