ட்ரம்பின் ஒரு மசோதா... அமெரிக்க வாழ் 4.5 மில்லியன் இந்தியர்களுக்கு பாதிப்பு
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஒரு பெரிய அழகான மசோதா சட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்க ஹவுஸ் பட்ஜெட் குழு ஞாயிற்றுக்கிழமை வாக்களித்துள்ளது.
சர்வதேச பணப் பரிமாற்றம்
இது அமெரிக்காவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) தங்கள் வீட்டிற்கு பணம் அனுப்புவதை மிகவும் செலவு மிகுந்ததாக மாற்றும்.
இந்த மசோதாவானது அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் செய்யும் அனைத்து சர்வதேச பணப் பரிமாற்றங்களுக்கும் 5 சதவீத வரி விதிக்க முன்மொழிகிறது. இதில் H-1B விசா மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களும் விதிவிலக்கல்ல.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், பரிமாற்றம் நடந்த இடத்திலேயே அனுப்பப்பட்ட தொகையில் 5 சதவீதத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். விலக்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால் சிறிய மதிப்புள்ள பணப் பரிமாற்றங்களுக்கும் இது பொருந்தும்.
ஆனால், அமெரிக்க குடிமக்களுக்கு இந்த விதி பொருந்தாது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமெரிக்காவில் வசிக்கும் கிட்டத்தட்ட 4.5 மில்லியன் இந்தியர்களுக்கு மிகப்பெரிய நிதி நெருக்கடியாக வரக்கூடும், இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 3.2 மில்லியன் பேர் அடங்குவர்.
கிட்டத்தட்ட 28 சதவீதம்
மார்ச் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புதல் கணக்கெடுப்பின்படி, 2023-24 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட மொத்த 118.7 பில்லியன் டொலர் தொகையில், கிட்டத்தட்ட 28 சதவீதம் அல்லது 32 பில்லியன் டொலர்கள் அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.
தோராயமாக 32 பில்லியன் டொலர்கள் என்றால் இந்திய சமூகம் 1.6 பில்லியன் டொலர் தொகையை வரியாக செலுத்த வேண்டியிருக்கும்.
ஏற்கனவே அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப ட்ரம்ப் நிர்வாகத்திற்கு 46.5 பில்லியன் டொலர் தொகை தேவைப்படும் நிலையில், சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடு கடத்தவும் இதுபோன்ற வரி விதிப்புகள் பயன்படுத்தப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |