இந்தியா வரிகளை முற்றிலுமாக குறைக்க முன்வந்துள்ளது; ஆனால் தாமதம் - டிரம்ப்
இந்தியாவின் வர்த்தக உறவு ஒருதலைபட்சமான பேரழிவு என டிரம்ப் விமர்சித்துள்ளார்.
இந்தியா அமெரிக்கா வர்த்தக போர்
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக போர் நடத்தி வருகிறார்.
சமீபத்தில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதாக கூறி, இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்த வரி விதிப்பு சட்டவிரோதமானது என அமெரிக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்தும், டிரம்ப் தனது வரி விதிப்பை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் சீன பிரதமர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் சீனாவில் நடைபெற்று வரும் SCO மாநாட்டில் சந்தித்து பேசினர்.
இதில் பேசிய ரஷ்யா ஜனாதிபதி புடின், பிரிக்ஸ் நாடுகள் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் இணைந்து நிற்கும் என தெரிவித்துள்ளார்.
டிரம்ப் விமர்சனம்
இந்நிலையில், இந்தியாவின் வர்த்தக உறவுகள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாம் இந்தியாவுடன் மிகக்குறைந்த அளவிலே வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால் அவர்கள் நம்மிடம் செய்யும் வியாபாரம் அதிகமானது.
அதாவது, அவர்கள் நம்மிடம் அதிகளவிலான பொருட்களை விற்கிறார்கள். ஆனால், நாங்கள் அவர்களிடம் மிக குறைந்த அளவிலே விற்கிறோம்.
பல தசாப்தங்களாக இந்த ஒரு தலைப்பட்சமான உறவு தொடர்கிறது. உலகின் பிற எந்த நாடுகளையும் விட எங்களிடம் இந்தியா அதிக அளவிலான வரி வசூலிப்பதால், எண்களின் பொருட்களை அவர்களிடம் விற்க முடிவதில்லை.
இது முற்றிலும் ஒருதலைப்பட்சமான பேரழிவாகும். இந்தியா அதிகளவிலான எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது. அமெரிக்காவிடமிருந்து அவர்கள் வாங்குவது வெகு குறைவானது.
அவர்கள் தற்போது வரிகளை முற்றிலுமாக குறைக்க முன்வந்துள்ளது. ஆனால், அது தாமதமாகி வருகிறது. அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இதை செய்திருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |