ட்ரம்பின் உத்தரவால் ஆபத்தில் ஊடகவியலாளர்கள்: எச்சரிக்கை விடுத்த அமைப்பு
அமெரிக்க நிதியுதவி பெறும் ஊடகங்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் நிதியை நிறுத்துவதாக அறிவித்ததால், ஊடகவியலாளர்கள் ஆபத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உலகளவில் ஊடகவியலாளர்களுக்கு ஆபத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல நாடுகளுக்கு நிதியுதவி வழங்குவது நிறுத்தப்படும் என சமீபத்தில் கூறியிருந்தார்.
அதேபோல், அமெரிக்க நிதியுதவி பெறும் ஊடகங்களுக்கும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளார்.
இதற்கு எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (Reporters Without Borders') கண்டனம் தெரிவித்துள்ளது.
voice of America போன்ற அமெரிக்க நிதியுதவி பெறும் சர்வதேச ஊடக நிறுவனங்களை, ஜனாதிபதி ட்ரம்ப் அகற்றுவது உலகளவில் ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.
குறிப்பாக, தற்போது அஜர்பைஜான், பெலாரஸ், மியான்மர், ரஷ்யா மற்றும் வியட்நாம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 9 USAGM பத்திரிகையாளர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் இது.
மேலும், ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்களை இது ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
ட்ரம்ப் VOAயின் தாய் நிறுவனமான அமெரிக்க குளோபல் மீடியா ஏஜென்சியை நீக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
Reporters Without Borders' எச்சரிக்கை
அதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு Voice of america மற்றும் பிற அமெரிக்க நிதியுதவி பெறும் ஊடகங்களில் பெருமளவிலான பணிநீக்கங்கள் தொடங்கின.
பத்திரிக்கை சுதந்திர கண்காணிப்பு அமைப்பும் Reporters Without Borders' எச்சரித்துள்ளதை குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து RSF இயக்குநர் ஜெனரல் திபோட் புருட்டின் வெளியிட்ட அறிக்கையில், "ட்ரம்ப் நிர்வாகம் ஒரு அதிர்ச்சியூட்டும் சமிக்ஞையை அனுப்புகிறது: பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ போன்ற சர்வாதிகார ஆட்சிகள் இப்போது தங்கள் பிரச்சாரத்தை தடையின்றி பரப்ப சுதந்திரமாக உள்ளன" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |