ஹவுதிகளுக்கு எதிராக உதவி கேட்ட சவுதி பட்டத்து இளவரசர்: கைவிரித்த ட்ரம்ப்
Trump declines Saudi crown prince's call: சவுதி பட்டத்து இளவரசரின் கோரிக்கையை நிராகரித்த ட்ரம்ப்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை இருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஹவுதிகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்துமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேரடி ராணுவ ஈடுபாடு
சவுதி இளவரசரின் கோரிக்கையை ட்ரம்ப் நிராகரித்ததாகவும், ஹவுதிகளுக்கு எதிராக தற்போதைக்கு நேரடி ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் எண்ணம் நிர்வாகத்திற்கு இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும் Axios செய்தி வெளியிட்டுள்ளது.

Axios செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, ஏமனில் வேகமாகத் தீவிரமடைந்து வரும் மோதல் குறித்து அமெரிக்கா மிகுந்த கவலை கொண்டுள்ளது; அதேவேளையில், நேரடி ராணுவ ஈடுபாட்டைத் தவிர்த்துக்கொண்டே சவுதி அரேபியாவுக்கான தனது ஆதரவை அது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் தளபதியான அட்மிரல் பிராட் கூப்பர், அவசர ஒருங்கிணைப்புப் பேச்சுவார்த்தைகளுக்காக வியாழக்கிழமையன்று சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டார் என்றார் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, மற்றொரு ராணுவ மோதலைத் தவிர்த்து, ஈரான் மற்றும் ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதில் அமெரிக்கப் படைகள் கவனம் செலுத்துவதே ட்ரம்ப்பின் உத்தரவு என்று அமெரிக்க ராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் சமீபத்திய வாரங்களில் தங்கள் சவுதி அரேபிய இணையான அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஏமன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், செங்கடலில் கப்பல் போக்குவரத்தை ஹவுதி தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக ஒரு சர்வதேசக் கூட்டணியை உருவாக்க சவுதி அரேபியா முயன்று வந்துள்ளது.
சனா சர்வதேச விமான நிலையத்தில் ஈரானிய சிவில் விமானம் ஒன்று தரையிறங்குவதைத் தடுக்க முயன்ற சவுதி போர் விமானங்களை தங்கள் படைகள் எதிர்கொண்டதாக ஹவுதிகள் கூறிய ஜூலை மாதத் தொடக்கத்திலிருந்தே இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது.
ட்ரம்ப் கடும் முயற்சி
மேலும், ஈரான் விவகாரத்தில் இஸ்ரேலின் அழுத்தம் காரணமாகத் தலையிட்டு, அதில் இருந்து வெளியேற முடியாமல் ட்ரம்ப் நிர்வாகம் தத்தளித்து வருகிறது.

பெரும்பாலான அமெரிக்க மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த இராணுவ மோதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ட்ரம்ப் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால், இஸ்ரேலை பகைத்துக்கொள்ள முடியாமல் ஈரானுடனான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வராமல் உள்ளது. இந்த நெருக்கடியான நிலையிலேயே சவுதி அரேபியாவின் கோரிக்கையை ட்ரம்ப் நிராகத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |