இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப்

Donald Trump Middle East Israel-Iran conflict
By Arbin Mar 09, 2026 04:15 PM GMT
Report

அணு ஆயுதப் போர் குறித்த அச்சத்தை உருவாக்கும் வகையில் அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி கட்டளை விமானங்களை களமிறக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுதப் போர்

வெளியான தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீதான போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவின் அணுசக்தி கட்டளை விமானங்கள் மத்திய கிழக்கில் பலமுறை வட்டமிட்டுள்ளது.

இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் | Trump Deploys Doomsday Planes

இந்த மிகப்பெரிய விமானங்கள் அணு ஆயுதப் போர் வெடித்தாலும் தப்பிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளை வான்வழியாக ஒருங்கிணைக்கிறது.

குறிப்பாக, இந்த விமானங்கள் ஜனாதிபதி மற்றும் போர் செயலாளருக்கு ஒரு கட்டளை மையமாக செயல்படுகிறது. மூன்றாம் உலகப் போர் வெடித்து அமெரிக்கா ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தால், மெர்குரி விமானப்படை அணு ஆயுதத் தாக்குதலை முன்னெடுக்கும் திறன் கொண்டது.

மார்ச் 2 ஆம் திகதி இரண்டு E-6B மெர்குரி விமானங்கள் அமெரிக்கா மீது காணப்பட்டன, அதில் ஒன்று வளைகுடா கடற்கரையிலிருந்து பயணித்து மேரிலாந்தில் கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்குகிறது.

அலி காமெனியின் இளைய மகனை புதிய உயர் தலைவராக அறிவித்த ஈரான்: ட்ரம்பின் மிரட்டல்

அலி காமெனியின் இளைய மகனை புதிய உயர் தலைவராக அறிவித்த ஈரான்: ட்ரம்பின் மிரட்டல்

மற்றொன்று நெப்ராஸ்காவில் உள்ள ஆஃப்ஃபுட் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு பின்னர் மீண்டும் அங்கேயே தரையிறங்கியது. வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து பாரசீக வளைகுடாவை நோக்கி மேலும் E-6B மெர்குரி விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவே தெரிய வருகிறது.

சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்லது இராணுவத்தின் கட்டுப்பாட்டு நிலையங்கள் அழிக்கப்பட்டால், ஜனாதிபதி ட்ரம்ப் அல்லது உயர் தலைவர்களிடமிருந்து கடற்படை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு உத்தரவுகளை அனுப்ப E-6B மெர்குரி விமானங்கள் பயன்படுத்தப்படுகிறது.

மத்திய கிழக்கில், போர் வெடித்த முதல் வாரத்தில் அமெரிக்க இராணுவத் தளங்கள், தூதரகங்கள் மற்றும் பிற முதன்மையான முகாம்கள் பல ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களால் தாக்கப்பட்டுள்ளன.

இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் | Trump Deploys Doomsday Planes

சீனாவும் ரஷ்யாவும்

இந்த நிலையிலேயே, தற்போது E-6B மெர்குரி விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய ஆரம்ப தாக்குதல்களுக்குப் பிறகு அணு ஆயுதத் தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மட்டுமின்றி, நிலைமை கட்டுப்பாட்டை மீறி ஒரு பெரிய போருக்கு வழிவகுக்கும் என்று ஈரானின் நட்பு நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் | Trump Deploys Doomsday Planes

மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளின் நிலைகள் குறித்த உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அணு ஆயுத நாடான ரஷ்யா ஈரானுக்கு உதவத் தொடங்கியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

E-6B மெர்குரி விமானங்களில் பொதுவாக 22 அதிகாரிகள் பணியாற்றுவார்கள். ஒரு E-6B மெர்குரி விமானத்தை உருவாக்க 141 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US