ஜெலென்ஸ்கியை மீண்டும் ஏமாற்றிய டொனால்டு ட்ரம்ப்: சாதித்த விளாடிமிர் புடின்
அமெரிக்காவின் சக்திவாய்ந்த Tomahawk க்ரூஸ் ஏவுகணையை உக்ரைனுக்கு வழங்க முடியாது என ஜெலென்ஸ்கியை மீண்டும் ஏமாற்றியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.
எளிதான விவகாரம் அல்ல
எதிர்காலத்தில் போர் மூளும் சூழல் ஏற்பட்டால், Tomahawk க்ரூஸ் ஏவுகணைகள் அமெரிக்காவிற்கு தேவைப்படும் என்றே ஜெலென்ஸ்கியிடம் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
உக்ரைனுக்கு கடந்த நான்கு வருடங்களாக அனுப்பியுள்ள பல ஆயுதங்களும் அமெரிக்காவிற்கு எதிர்காலத்தில் தேவைப்படுபவை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெரும் எண்ணிக்கையிலான மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு அளிப்பது என்பது எளிதான விவகாரம் அல்ல என்றும், அவர்களுக்கு அதன் தேவை இல்லை என நம்புவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, Tomahawk க்ரூஸ் ஏவுகணைகளை நம்பாமல், போரை முடிவுக்கு கொண்டுவருவதில் முயற்சிகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசும் முன்னர் வரையில், Tomahawk க்ரூஸ் ஏவுகணை தொடர்பில் உக்ரைனுக்கு நம்பிக்கை அளித்து வந்த ட்ரம்ப், தற்போது அப்படியான ஆபத்தான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கினால், அது போரை மேலும் உக்கிரமடையச் செய்யும் என விளக்கமளித்துள்ளார்.
மேலும், உக்ரைனுக்கு Tomahawk க்ரூஸ் ஏவுகணைகளை வழங்கினால், அது ரஷ்ய - அமெரிக்க உறவுகளை பாதிக்கும் என்றே ட்ரம்ப் கருதுகிறார். ஜனவரியில் ஜனாதிபதி பொறுப்புக்கு வந்ததன் பின்னர் பலமுறை உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்தில் மாற்றம் செய்து வந்துள்ளார்.
புடினுடன் விவாதிப்பதும், அல்லது உக்ரைனை ஆதரிக்கும் ஐரோப்பிய நாடுகளுடன் ஆலோசிப்பதும் என உக்ரைனை ஏமாற்றுவதையே இலக்காக வைத்திருந்தார்.
இது எட்டாவது முறை
ஜெலென்ஸ்கியுடனான வெள்ளை மாளிகை சந்திப்பின் போது, ஹங்கேரியில் புடினுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவதற்கான திட்டங்களையும் ட்ரம்ப் விவாதித்துள்ளார். இந்த நிலையில், ரஷ்ய தரப்பில் இருந்து வெளியான தகவலில்,
வெள்ளிக்கிழமை நடந்த தொலைபேசி உரையாடலில், உக்ரைனுக்கு Tomahawk க்ரூஸ் ஏவுகணைகளை வழங்க வேண்டாம் என புடின் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்புக்கு வந்ததன் பின்னர் இது எட்டாவது முறை விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் ட்ரம்ப் உரையாடுவது. உக்ரைனுக்கு ஆதரவான முடிவெடுக்கும் எந்த தருணத்திலும்,
ட்ரம்ப் ரஷ்யாவிற்கு தொலைபேசி உரையாடல் முன்னெடுப்பதும், அதன் பின்னர் உக்ரைன் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதும் வாடிக்கையாக வைத்துள்ளார். உக்ரைன் விவகாரத்தில் இது விளாடிமிர் புடினின் இன்னொரு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |