புதிதாக 20 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள ட்ரம்ப் அரசு
அமெரிக்காவின் பயணத் தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மேலும் 20 நாடுகளை சேர்த்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு, 2026 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் வகையில், 20 புதிய நாடுகள் மற்றும் பாலஸ்தீன அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கொண்டவர்களுக்கு அமெரிக்கா பயணத் தடைகளை அறிவித்துள்ளது.
இதற்கு முன், 2025 ஜூன் மாதத்தில் 12 நாடுகளுக்கு முழுமையான தடையும், 7 நாடுகளுக்கு பகுதி தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
அதில் ஆப்கானிஸ்தான், மியான்மார், சாட், காங்கோ, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், யேமன் ஆகியவை அடங்கும்.

புதிய அறிவிப்பின் படி, புர்கினா பாசோ, மாலி, நைஜர், தென் சூடான், சிரியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் முழுமையாக அமெரிக்கா நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பாலஸ்தீன அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும் அமெரிக்கா செல்ல முடியாது.
அதோடு, அங்கோலா, ஆன்டிகுவா & பார்புடா, பெனின், ஐவரி கோஸ்ட், டொமினிகா, காபோன், காம்பியா, மலாவி, மௌரிடானியா, நைஜீரியா, செனெகல், தான்சானியா, டோங்கா, சாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய 15 நாடுகளுக்கு பகுதி தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசு, “இந்த நாடுகளில் ஊழல், போலியான ஆவணங்கள், குற்றச் செயல்கள், விசா மீறல்கள், அரசியல் நிலைத்தன்மையின்மை அதிகம் உள்ளது. இதனால், குடிமக்களை சரியாகச் சோதனை செய்வது கடினமாகிறது” என்று தெரிவித்துள்ளது.
இந்த முடிவு, தேசிய பாதுகாப்பு, குடிவரவு அமலாக்கம் மற்றும் வெளிநாட்டு கொள்கை காரணங்களுக்காக எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், மனித உரிமை அமைப்புகள், “இது தேசிய பாதுகாப்பு என்கிற பெயரில் குறிப்பிட்ட நாடுகள் மீது பாகுபாடு காட்டும் நடவடிக்கை” என கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்த அறிவிப்பு, அமெரிக்கா-பாலஸ்தீன உறவுகள் மற்றும் ஆப்ரிக்க நாடுகளுடனான தொடர்புகளை மேலும் சிக்கலாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump expands US travel ban 2026, Full list of banned countries US travel, US restrictions on Palestinian Authority passports, Burkina Faso Mali Niger South Sudan Syria ban, Partial travel restrictions Africa nations 2025, US immigration policy national security concerns, Laurie Ball Cooper refugee assistance response, Afghan SIV visa program restrictions controversy, US foreign policy travel ban expansion, Trump administration immigration crackdown 2025