ஜெலென்ஸ்கியை புடின் சந்திக்காததன் காரணம் இதுதான் - டிரம்ப் விளக்கம்
ஜெலென்ஸ்கியை புடின் சந்திக்காததன் காரணம் குறித்து டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர்
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது.
இந்த போரை நிறுத்த தீவிரமாக முயற்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி, அலஸ்காவில் வைத்து ரஷ்யா அதிபர் புடினை சந்தித்து பேசினார்.
அதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 18 ஆம் திகதி, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையில் வைத்து டிரம்ப் சந்தித்து பேசினார்.
ஆனால், இந்த இரு சந்திப்புகளிலும் எந்த வித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இரு நாடுகளுக்கு இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜெலென்ஸ்கியை சந்திக்காதது ஏன்?
இதனையடுத்து, ஜெலென்ஸ்கியை சந்திக்க புடின் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால், ஜெலென்ஸ்கி உடனான பேச்சுவார்த்தை குறித்து எந்த திட்டமும் இல்லை என ரஷ்யா மறுப்பு தெரிவித்தது.
புடின் ஜெலென்ஸ்கியை சந்திக்க தயங்குவது ஏன் என டிரம்பிடம் கேட்டபோது, புடின் ஜெலென்ஸ்கியை சந்திக்க மாட்டார். ஏனென்றால் அவருக்கு அவரை பிடிக்கவில்லை.
நேரில் சந்திப்பார்களா என எனக்கு தெரியாது. ஒருவேளை சந்திக்கலாம். அடுத்த 2 வாரங்களில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து அதில் தலையிடுவேன் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |