தலா 100,000 டொலர்., கிரீன்லாந்து குடிமக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டம்
கிரீன்லாந்து குடிமக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க அந்நாட்டு குடிமக்களுக்கு நேரடியாக பணம் வழங்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறார்.
ஒவ்வொரு கிரீன்லாந்து குடிமகனுக்கும் 10,000 டொலர் முதல் 100,000 டொலர் வரை வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கிரீன்லாந்தின் மக்கள் தொகை சுமார் 57,000 மட்டுமே. எனவே, இதற்கான மொத்த செலவு 6 பில்லியன் டொலர் வரை செல்லும் என மதிப்பிடப்படுகிறது.

கிரீன்லாந்து தற்போது டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக உள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்ததால் அமெரிக்கா அதனை முக்கியமாகக் கருதுகிறது.
அதேபோல், “தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு கிரீன்லாந்து அவசியம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்புகள்
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க கனவு காண வேண்டாம் என அந்நாட்டின் பிரதமர் ஜென்ஸ்-பிரடெரிக் நீல்சன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டென்மார்க் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள், “கிரீன்லாந்தின் எதிர்காலம் கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் முடிவில் தான் உள்ளது” என கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, டென்மார்க் வெளியுறவு அமைச்சருடன் விரைவில் சந்தித்து விவாதிக்க உள்ளார்.
மக்களின் நிலைமை
பெரும்பாலான கிரீன்லாந்து மக்கள் டென்மார்க்கில் இருந்து சுதந்திரம் பெற விரும்புவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால், அமெரிக்காவின் பகுதியாக ஆக விருப்பமில்லை என தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ட்ரம்பின் திட்டம் உலக அரசியல் சூழலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்லாந்து மக்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், அமெரிக்கா தனது தேசிய பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து தொடர்ந்து முயற்சி செய்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |