போதைப்பொருள் கடத்தலில் முக்கிய நாடுகளாக இந்தியா உட்பட 23 நாடுகளை அறிவித்த ட்ரம்ப்
போதைப்பொருள் கடத்தலில் முக்கிய நாடுகளாக இந்தியா, சீனா உள்ளிட்ட 23 நாடுகளை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், 2025 செப்டம்பர் மாதம் காங்கிரஸுக்கு சமர்ப்பித்த Presidential Determination அறிக்கையில், இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள்" என அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான், பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, பர்மா, சீனா, கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், குவாத்தமாலா, ஹைட்டி, ஹோண்டுராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகரகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகியவை இந்த நாடுகளாகும்.
இந்த பட்டியலில் உள்ள நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் அதன் குடிமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன என ட்ரம்ப் கூறியுள்ளார்.
குறிப்பாக, சீனா உலகளவில் Fentanyl உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் வழங்கும் மிகப்பெரிய நாடாக இருப்பது அவனப்படுத்தப்பட்டுள்ளது.
சீனா அரசு, இந்த வேதியல் பொருட்களின் கடத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு போதை மருந்துகளை தடை செய்ததாக அறிவித்திருந்தாலும், methamphetamine உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருவதால், அந்த நாடும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
trump names India drug transit country, India China Afghanistan, Trump drug transit countries list 2025, illicit drug producing countries