ஐரோப்பிய ஒன்றியம் மீது பேரிடியை இறக்கிய ட்ரம்ப்... கனடா தொடர்பில் புதிய அறிவிப்பு
கனடா மற்றும் மெக்சிகோவுக்கு மேலும் ஒரு மாத காலம் அவகாசம் அளித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் மீது பேரிடியை இறக்கியுள்ளார்.
25 சதவிகித வரி
கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்பு ஏப்ரல் 2ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ட்ரம்ப் புதிதாக அறிவித்துள்ளார். ஆனால் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் இதர பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பை அறிவித்துள்ளார்.
கனடா மற்றும் மெக்சிகோ மீது மார்ச் 4ம் திகதி முதல் அமுலுக்கு வர இருந்த 25 சதவிகித வரி விதிப்பு அமுலில் இருப்பதாகவும், ஆனால் தற்போது கால அவகாசம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் கனடா மற்றும் மெக்சிகோ மீதான வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் குழப்பத்தில் இருந்தார் என்றே கூறப்படுகிறது.
ஏப்ரல் 2ம் திகதி முதல் வரி விதிப்பு அமுலுக்கு வருவதாக குறிப்பிட்ட டொனால்டு ட்ரம்ப், அனைத்துப் பொருட்கள் மீதும் அல்ல, ஆனால் பெரும்பாலான பொருட்கள் மீது வரி விதிக்கப்படும் என்றார்.
ட்ரம்பின் இந்த கருத்து கனேடிய டொலர் மற்றும் மெக்சிகன் பெசோ மற்றும் கிரீன்பேக்கின் மதிப்பில் உயர்வைத் தூண்டின. வரி விதிப்பு விவகாரத்தில் நிர்வாக உத்தரவுக்கு ட்ரம்ப் ஒப்புதல் அளிக்கும் வரையில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றே கனேடிய அமைச்சர் Francois-Philippe தெரிவித்துள்ளார்.
ஏமாற்றுவதற்காவே
கனடாவின் நோக்கம் என்பது ட்ரம்பின் வரி விதிப்பைத் தவிர்ப்பது, தேவைப்பட்டால் இடைநீக்கத்தை நீட்டிப்பது என்றே அமைச்சர் Francois-Philippe குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் தங்களின் கார்கள் மற்றும் வேளாண் பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை என்றும்,
அவர்கள் அமெரிக்காவை ஏமாற்றுவதற்காவே உருவாக்கப்பட்டார்கள் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கான நியாயமற்ற தடைகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாகவும் உடனடியாகவும் செயல்படும் என்றார்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியம் உலகின் மிகப்பெரிய சுதந்திர சந்தையாகும். இது அமெரிக்காவிற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது என்பதையும் மறுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |