321 வைரங்கள் பதித்த மோதிரத்தை ட்ரம்புக்கு பரிசாக வழங்கிய பெல்ஜிய நிறுவனம்
அமெரிக்கா-பெல்ஜியம் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில், பெல்ஜியத்தின் பிரபல வைர நிறுவனமொன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு விலைமதிப்பற்ற மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளது.
இந்த மோதிரம் 18 காரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்டு, அதில் 321 வைரங்கள், 56 நீலக்கற்கள் (Saphire), 13 மரகதங்கள் (Emerald), 6 மாணிக்கங்கள் (Ruby) பதிக்கப்பட்டுள்ளன.

மோதிரத்தில் அமெரிக்கக் கொடி, “1776-2026” என்ற எழுத்துக்கள், கழுகு சின்னம், “250 YEARS USA” போன்ற வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த மோதிரம், அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க தூதருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அது ட்ரம்புக்கு அனுப்பப்படும்.
A Belgian diamond center unveiled a gold diamond ring for President Donald Trump to mark America’s 250th anniversary. The ring has not yet been presented to the president. pic.twitter.com/3A1wrqkYgH
— NTD News (@NTDNews) July 4, 2026
அமெரிக்கா, பெல்ஜியத்திலிருந்து வரும் வைரங்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை நீக்கியதைத் தொடர்ந்து, அங்குள்ள வைர வியாபாரிகள் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த மோதிரத்தை உருவாக்கியுள்ளனர்.
ஆண்டுதோறும் 2 பில்லியன் டொலர் மதிப்பிலான வைரங்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த மோதிரத்தின் மதிப்பு சுமார் 25,000-35,000 அமெரிக்க டொலர் என கூறப்படுகிறது. இதில் பாதி செலவு கற்கள் மற்றும் தங்கத்திற்கும், மீதி கைவினை வேலைப்பாடுகளுக்கானது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |