ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேறும் அமெரிக்க படைகள்? டிரம்ப் யோசனை
ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்ப பெறுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படைகள் திரும்பப் பெறுதல்
வியாழக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜேர்மனி, ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு யாருடைய உதவியும் தேவையில்லை என விளக்கியுள்ளார்.

அத்துடன் இந்த அசாதாரண சூழ்நிலையை அமெரிக்கா தங்களின் கூட்டணி நாடுகளின் வலிமையை கண்டறியும் சோதனையாக பயன்படுத்தி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கைவிட்ட ஐரோப்பிய கூட்டாளிகள்

ஈரானுடனான போர் நடவடிக்கையில் நேட்டோ உறுப்பினரான ஐரோப்பிய நாடுகள் சில அமெரிக்காவிற்கான ஆதரவை வழங்கவில்லை என டிரம்ப் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவிற்கு தேவைப்பட்ட போது அவர்கள் உதவவில்லை, ஆனால் உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டாளிகளும் நாங்கள் உதவினோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |