10% கூடுதல் உலகளாவிய வரி: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு டிரம்ப் பதிலடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிதாக 10% உலகளாவிய இறக்குமதி வரியை அறிவித்துள்ளார்.
டிரம்பின் பரஸ்பர வரி ரத்து
வெள்ளிக்கிழமை அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய அதிகாரங்களை மீறி நாட்டின் அவசர நிலைக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தை பயன்படுத்தி உலக நாடுகள் மீது வரி விதித்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பு சட்டத்தை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டது.

10% கூடுதல் உலகளாவிய வரி
இந்நிலையில் அமெரிக்க வர்த்தக கொள்கையின் புதிய நடவடிக்கையாகவும், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பதிலடி கொடுக்கும் விதமாகவும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதிதாக 10% உலகளாவிய இறக்குமதி வரியை அறிவித்துள்ளார்.
இந்த புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரி, தற்போது நடைமுறையில் உள்ள வரிகளுடன் கூடுதலாக சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வரி விதிப்பு 5 மாதங்களுக்கு(150 நாட்களுக்கு) அமுலில் இருக்கும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப்
அத்துடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப், பல்வேறு சட்ட பிரிவுகளை குறிப்பிட்டு தனது தலைமையிலான அரசாங்கம் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, பிரிவு 122-ன் கீழ் முன்னர் அறிவிக்கப்பட்ட சாதாரண வரிகளுடன் கூடுதலாக தற்போது உள்ள 10% உலகளாவிய இறக்குமதி வரியும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிவு 232 மற்றும் 301-ன் கீழ் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்கனவே விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகள் அனைத்தும் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பிற உலக நாடுகளின் பொருளாதார மேலாதிக்கத்திலிருந்து அமெரிக்காவை பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியமானது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |