ட்ரோன்களுக்கு 100 சதவீதம் வரி - சீனாவை குறிவைத்து ட்ரம்ப் நடவடிக்கை
Trump imposes 100 percent tariffs on drones: சீன ட்ரான்கள் இறக்குமதி செய்யப்படுவதை குறைக்க ட்ரம்ப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், சீனாவை குறிவைத்து, ட்ரோன்கள் மற்றும் அவற்றின் கூறுகளை இறக்குமதி செய்வதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
100 சதவீத வரி
வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 25 கிலோ எடையைத் தாண்டும் ட்ரோன்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு பயன்பாடுகளுக்கான திறன்கள் கொண்ட ட்ரோன்களுக்கு (உதாரணமாக thermal cameras, docking stations) 100 சதவீத வரி விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான ட்ரோன்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்.
அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, வெளிநாட்டு விநியோக சங்கிலிகளின் மீது இருக்கும் சார்பை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரிகள் செப்டம்பர் 3, 2026 முதல் அமுலுக்கு வரும்.
இதன்மூலம், உள்நாட்டு ட்ரோன் உற்பத்தி, அனுமதியற்ற கண்காணிப்பு, தரவு திருட்டு மற்றும் தாக்குதல் அபாயங்களை குறைக்கும் என அமெரிக்காவின் Federal Communications Commission (FCC) வலியுறுத்தியுள்ளது.
சீன ட்ரோன்கள் ஆபத்தானவை
ட்ரோன்கள் வணிகத்திற்கும், இராணுவத்திற்கும் பயன்படுத்தப்படும் “dual-use” தொழில்நுட்பம் என்பதால், சீனாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் அமெரிக்க பாதுகாப்பிற்கு ஆபத்தானவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் DJI நிறுவனம் உலகளாவிய ட்ரோன் சந்தையில் மூன்றில் இரண்டு பங்கைக் கைப்பற்றியுள்ளது. இது, சீனாவின் இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளதால், அமெரிக்க சந்தையில் கடுமையான கட்டுப்பாடுகளை சந்தித்து வருகிறது.
சமீபத்தில், சீனாவும் அமெரிக்காவிற்கு ட்ரோன் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதித்து, ஆறு அமெரிக்க நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால், அமெரிக்கா-சீனா இடையேயான ட்ரோன் வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |