புடினுடனான பேச்சுவார்த்தை எங்கும் செல்வதில்லை! விரக்தியில் டிரம்ப் சொன்ன வார்த்தைகள்
புடினுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் எங்கு செல்கிறது என்று தெரியவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை
உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ரஷ்யா ஜனாதிபதி புடினுடன் சந்திப்புகளில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக அந்நாட்டின் இரண்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்த அறிவிப்பானது, புடாபெஸ்டில்(Budapest) ரஷ்ய ஜனாதிபதி புடினுடனான டிரம்பின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து வெளிவந்துள்ளது.
விரக்தியில் டிரம்ப்
இந்நிலையில் புடினுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து டிரம்ப் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், “ஒவ்வொரு முறையும் நானும், புடினும் சந்தித்துக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தும் போது நல்ல முறையில் உரையாடல் செல்கிறது. ஆனால் அவை இறுதியில் எங்குமே செல்வது இல்லை” என தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை பேசிய டிரம்ப், புடின் அமைதியை நிலைநாட்டுவதில் தீவிரமாக இல்லை என்றும், இந்த பொருளாதார தடைகள் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், போர் நிறுத்தத்திற்கு புடின் ஒப்புக் கொண்டால் பொருளாதார தடைகள் உடனடியாக திரும்பப் பெறப்பட முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |