ஈரான் அவரைக் கொலை செய்தால்... ட்ரம்ப் அதிகாரிகளுக்கு இட்டுள்ள ஒரேயொரு கட்டளை
ஈரான் தன்னைத் தாக்கிக் கொல்லும் பட்சத்தில், அந்த நாட்டின் மீது மிகப் பெரிய அளவில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுவரை கண்டிராத
நியூயார்க் போஸ்ட் இதழிடம் பேசிய ட்ரம்ப், நீண்ட காலமாகவே தான் ஈரானின் கொலைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறினார். நீண்ட காலமாகவே தாம் அவர்களின் பட்டியலில் இருப்பதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், இதுதான் தற்போதைய நிலைமை என்றார்.

ஒரே ஒரு விடயம் என்னவென்றால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அவர்கள் இதுவரை கண்டிராத அளவுக்கு அவர்கள் மீது குண்டுவீசுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
தன்னைக் கொலை செய்ய ஈரான் தீட்டியுள்ள புதிய சதித்திட்டம் குறித்து இஸ்ரேல் எச்சரித்தது பற்றி அவரிடம் கேட்டபோது, அத்தகைய புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.
இருப்பினும், பல ஆண்டுகளாகவே ஈரான் தன்னை ஒழித்துக்கட்ட விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு, அமெரிக்காவுக்குத் திரும்பும் வழியில் ட்ரம்ப் தனது பயணத் திட்டங்களை மாற்றிக்கொண்டார்.
இது ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கான ஒரு பாதுகாப்பு உத்தி என்று வெள்ளை மாளிகை பின்னர் ஒப்புக்கொண்டது. ஈரானிய இராணுவ அதிகாரி காசெம் சுலைமானியைக் கொன்ற தாக்குதலை ட்ரம்ப் முன்னெடுத்ததிலிருந்து, அவர் ஈரானின் இலக்காக இருந்து வருவதாக நம்புகிறார்.
ஈரானின் கொலைப் பட்டியல் என்று சொல்லப்படுவதில், தாம் முதன்மையான இலக்கு என்று ட்ரம்ப் கூறுவது இது முதல் முறையல்ல. இத்தனை நாளும் தனக்கு அதிர்ஷ்டம் இருந்தபோதிலும், அந்த நிலை தொடராமல் போகலாம் என்றும் ட்ரம்ப் உருக்கமாக தெரிவித்திருந்தார்.

ட்ரம்பின் இந்த குழப்பமான மனநிலைக்கு இஸ்ரேல் உளவு அமைப்புகள் காரணம் என்றும் அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வன்முறை குணம்
ஈரான் மீதான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள திட்டமிட்டு வரும் இஸ்ரேல், ட்ரம்பை ஒரு உறுதியான முடிவெடுக்க விடாமல் செய்துள்ளது. இஸ்ரேலின் திட்டத்தின்படியே ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, கொலைப்பட்டியல், முதன்மையான இலக்கு உள்ளிட்டக் கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார்.
ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களை அற்பர்கள் என்று குறிப்பிட்ட ட்ரம்ப், அவர்களைத் தமக்குச் சிறிதளவும் பிடிக்காது என்றும் கூறினார். ஈரானின் 80 பகுதிகளில் குண்டுவீச்சு நடத்தியதன் பின்னர், அவர்கள் கொடூரமான, வன்முறை குணம் கொண்டவர்கள்... என்னைப் பொறுத்தவரை, எல்லாம் முடிந்துவிட்டது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் கூட, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைக் கொல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள், தெஹ்ரானில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்த கிராண்ட் மொசல்லா தொழுகை வளாகம் முழுவதும் எதிரொலித்தன.
கிராண்ட் மொசல்லாவில் இருந்த சுவரொட்டிகள் மற்றும் சுவரெழுத்துக்கள், டிரம்ப் மற்றும் நெதன்யாகுவைக் கொலை செய்யக் கோரியதோடு, கூட்டத்தினரிடையேயும் அதுபோன்ற முழக்கங்கள் எதிரொலித்தன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |