அமெரிக்க உணவுப் பொருட்களை ஈரான் வாங்கியே ஆகவேண்டும்., ட்ரம்ப் மாஸ்டர் பிளான்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானுடன் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தைகள் அமெரிக்க விவசாயிகளுக்கு பெரிய வெற்றியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அவர், ஈரானின் முடக்கப்பட்ட நிதி வளங்களை திறப்பது, அந்த நாடு அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் சோளம், சோயாபீன், கோதுமை போன்ற உணவுப் பொருட்களை வாங்குவதுடன் இணைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
ட்ரம்ப் தனது சமூக ஊடக பதிவில், “இவை ஈரானுக்கு மிகவும் அவசியமானவை. இது ஒரு மனிதாபிமான நெருக்கடி. உதவுவது அவசியம்” என்று பதிவு செய்துள்ளார்.

ஆனால், நிபுணர்கள், ஈரான் உடனடியாக அமெரிக்காவில் இருந்து பெருமளவு உணவுப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது எனக் கூறுகின்றனர்.
சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான ஜோசப் கிளாவர், “ஈரான் தனது தற்போதைய வர்த்தக கூட்டாளிகளை (பிரேசில், இந்தியா, துருக்கி, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, அவுஸ்திரேலியா, அர்ஜென்டினா) விட்டு விலகி அமெரிக்காவைத் தேர்வு செய்யாது” எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் இந்த கோரிக்கை, உலகளாவிய உணவு சந்தையில் போட்டியை அதிகரிக்கும். குறிப்பாக, ஈரானுடன் ஏற்கனவே வலுவான வர்த்தக உறவுகளை கொண்டுள்ள நாடுகளுக்கு இது சவாலாக இருக்கும்.
இந்த அறிவிப்பு, அமெரிக்கா-ஈரான் உறவுகளில் புதிய பரிமாணத்தை உருவாக்குகிறது. விவசாயிகள், அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையால் தங்களது உற்பத்திக்கு புதிய சந்தை கிடைக்கும் என நம்புகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |