காசாவில் பேரழிவு நிச்சயம்: ஹமாஸுக்கு டிரம்ப் விதித்த புதிய காலக்கெடு
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதற்கான புதிய காலக்கெடுவை டிரம்ப் நிர்ணயித்துள்ளார்.
டிரம்ப் நிர்ணயித்த புதிய காலக்கெடு
காசாவில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக் கொள்வதற்கான புதிய காலக்கெடுவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார்.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கடுமையான பேரழிவை சந்திக்க வேண்டி வரும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், வாஷிங்டன் டி.சி நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும், அவ்வாறு இந்த இறுதி வாய்ப்பை ஹமாஸ் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் மற்றும் மத்திய கிழக்கில் அமைதி நிலைநாட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தயக்கம்
வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து இந்த 20 அம்ச ஒப்பந்தத்தை டிரம்ப் வெளியிட்டு இருந்தார்.
இந்த ஒப்பந்தத்தில் உடனடி போர் நிறுத்தம், பிணைக் கைதிகள் விடுவிப்பு, ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன பிரிவுகள் இந்த ஒப்பந்தம் குறித்து முடிவு எடுக்க அவகாசம் கோரியுள்ளது.
இந்நிலையில் பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஹமாஸ் குழு ஏற்றுக் கொள்ளாது என ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் மர்தாவி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |