மெக்சிகோவிற்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
டெக்சாஸ் விவசாயிகளிடமிருந்து தண்ணீரைத் திருடுவதாக குறிப்பிட்டு மெக்சிகோவிற்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி ட்ரம்ப்.
மெக்சிகோ மீது நெருக்கடி
மெக்சிகோ மீது புதிய வரிகளும் தேவையெனில் பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் மீதான தனது வரி விதிப்புகளுக்கு 90 நாள் இடைநிறுத்தத்தை ஜனாதிபதி ட்ரம்ப் புதன்கிழமை அறிவித்தார்.
இருப்பினும் மெக்சிகோ மீது நெருக்கடி அளிக்கும் வகையில், 1944 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட குடிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு மில்லியன் ஏக்கர் அடிக்கு மேல் தண்ணீரைத் திருடியதாக ட்ரம்ப் மெக்சிகோ மீது குற்றம் சாட்டினார்.
தொடர்புடைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரியோ கிராண்டே நதியிலிருந்து அமெரிக்காவிற்கு 1.75 மில்லியன் ஏக்கர் அடி தண்ணீரை மெக்சிகோ அனுப்ப வேண்டும். ஒரு ஏக்கர் அடி தண்ணீர் என்பது ஒலிம்பிக் விளையாட்டின் போது பயன்படுத்தப்படும் நீச்சல் குளத்தில் பாதியை நிரப்பப் போதுமானது.
இந்த நிலையில், ட்ரம்ப் தெரிவிக்கையில், 1944 ஆம் ஆண்டு குடிநீர் ஒப்பந்தத்தின் கீழ் மெக்சிகோ டெக்சாஸுக்கு 1.3 மில்லியன் ஏக்கர் அடி தண்ணீரைக் கடன்பட்டுள்ளது. ஆனால் மெக்சிகோ துரதிர்ஷ்டவசமாக தங்கள் ஒப்பந்தத்தையே மீறுகிறது.
கடைப்பிடித்து வருகிறது
இது மிகவும் நியாயமற்றது, மேலும் இது தெற்கு டெக்சாஸ் விவசாயிகளை மிகவும் மோசமாக பாதிக்கிறது என்றார். மேலும் டெக்சாஸ் வேளாண் மக்களுக்கு ஆதரவாக இந்த போராட்டத்தில் உறுதியாக இருப்போம் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப்,
மெக்சிகோ தங்கள் ஒப்பந்தத்தை மதிக்கும் வரையில் வரிகள் மற்றும் தடைகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்யும் என்றார். ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தண்ணீர் கிடைக்கும் அளவிற்கு மெக்சிகோ ஒப்பந்தத்தை கடைப்பிடித்து வருகிறது என்றும் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் பதிலளித்துள்ளார்.
இதனிடையே, எல்லையோரத்தில் மெக்சிகோவின் கால்நடை வளர்ப்பு மற்றும் பீக்கான் தொழிற்சாலைகள் பல விலைமதிப்பற்ற தண்ணீரைப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்க அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
டெக்சாஸ் குடியரசுக் கட்சியினரும், மெக்ஸிகோ அதன் நீர் விநியோகங்களில் நீண்டகாலமாக ஒப்பந்தத்தை வெளிப்படையாகப் புறக்கணிப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |