ட்ரம்ப் போல் தோற்றமுள்ள வைரல் எருமை - ஈத் பண்டிகைக்காக விற்பனை
ட்ரம்ப் போல் தோற்றமுள்ள எருமை வைரலான நிலையில், ஈத் பண்டிகைக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ட்ரம்ப் போல் தோற்றமுள்ள எருமை
வங்கதேசத்தின் நாராயண்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் அல்பினோ என்ற எருமை வளர்க்கப்பட்டு வந்தது.

இதன் சிகையலங்காரம், முகத்தோற்றம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போல் இருப்பதாக உள்ளூர்வாசிகள் கருதிய நிலையில், அதற்கு டொனால்ட் டிரம்ப் என பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த எருமையின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில், அதனை நேரில் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொள்ள ஏராளமானோர் அந்த பண்ணைக்கு வருகை தந்துள்ளனர்.
#WATCH | Dhaka, Bangladesh | People gather to see the viral albino buffalo with blond locks, nicknamed 'Donald Trump,' before it is sacrificed as part of the Eid al-Adha festival's 'Qurbani' ritual. pic.twitter.com/AElrUwB9k9
— ANI (@ANI) May 26, 2026
ஈத் பண்டிகைக்காக விற்பனை
இந்த பண்ணை குர்பானி சந்தைகளில் பயன்படுத்துவதற்காக, தரமான எருமைகள் மற்றும் மாடுகளை வளர்ப்பதில் பெயர் பெற்றது.

சுமார் 700 கிலோ எடை உள்ள அந்த எருமையை ஜின்ஜிரா பகுதியைச் சேர்ந்த முகமது ஷோரன் என்பவர் கிலோவிற்கு 550 பங்களாதேஷ் டாக்கா(இந்திய மதிப்பில் ரூ.427) என்ற அடிப்படையில் வாங்கியுள்ளார்.
ஈத் பண்டிகையின் போது தனது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக மட்டுமே அந்தப் பெரிய அல்பினோ எருமையை வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |