ட்ரம்பின் பேச்சுக்களும் தற்புகழ்ச்சியும்.., ஈரான் போரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்கா
US isolated in Iran war: ட்ரம்பின் முடிவுகளால் ஈரான் போரில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா-ஈரான் போரின் சூழலில், வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி உலக அரசியலை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்கா
அமெரிக்கா தனது பழைய கூட்டாளிகளின் ஆதரவை இழந்து, தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் போராடி வருகிறது.

கடந்த காலங்களில், ஆப்கானிஸ்தான், ஈராக், வியட்நாம் போன்ற யுத்தங்களில் அமெரிக்கா பல நாடுகளின் கூட்டணியுடன் செயல்பட்டது.
ஆனால் தற்போது ஈரானுக்கு எதிரான போரில், அமெரிக்கா தனியாக நிற்கிறது. இஸ்ரேல், நேட்டோ நாடுகள், சவுதி அரேபியா போன்ற சக்திகள் கூட அமெரிக்காவை விட்டு விலகியுள்ளன.
முக்கிய காரணம் ட்ரம்ப்
இதற்கான முக்கிய காரணமாக, தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எடுத்த முடிவுகள் மற்றும் அவரது பேச்சுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ட்ரம்பின் “தற்புகழ்ச்சி” மற்றும் “தனிப்பட்ட யுத்தம்” என்ற அணுகுமுறை, அமெரிக்காவை உலகளவில் தனிமைப்படுத்தியதாக விமர்சிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகள் யுத்தத்திற்கு முன் மக்களையும் உலகையும் தயார்படுத்திய நிலையில், ட்ரம்ப் தனது தனிப்பட்ட வெற்றிக்காக யுத்தத்தை முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க ஊடகங்களே ட்ரம்புக்கு எதிராக செயல்பட்டு, ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதாகவும், இதனால் அமெரிக்கா பலவீனமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், ட்ரம்பின் கனடா மற்றும் கிரீன்லாண்ட் தொடர்பான கருத்துக்கள், நேட்டோ நாடுகளை விலகச் செய்ததாகவும் விளக்கப்படுகிறது.
ஈரான் தனது அரசியலை முன்னிறுத்தி போராட, அமெரிக்கா வியாபார நோக்கில் போராடுகிறது என்பதே முக்கிய குற்றச்சாட்டு. இதனால், அமெரிக்கா பெரும் இராணுவ சக்தி இருந்தும், வெற்றியைப் பெற முடியாமல் தடுமாறுகிறது.
ட்ரம்பின் முடிவுகள் அமெரிக்காவை உலகளவில் தனிமைப்படுத்தி, ஈரான் போரில் வெற்றியடைய முடியாத நிலைக்கு தள்ளியுள்ளதாக இந்த காணொளியில் சுட்டிக்காட்டப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |