உக்ரைனுக்கு Tomahawk ஏவுகணை வழங்க ட்ரம்ப் திட்டம் - ரஷ்யா கடும் எச்சரிக்கை
உக்ரைனுக்கு Tomahawk ஏவுகணை வழங்கும் ட்ரம்பின் திட்டத்தை எதிர்த்து ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு ட்ரம்ப், உக்ரைனுக்கு நீண்ட தூர டோமஹாக் (Tomahawk) ஏவுகணைகளை வழங்கும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக அறிவித்துள்ளார்.
இது, ரஷ்யாவுடன் நடைபெறும் போரில் உக்ரைனின் தாக்குதல்களை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ஆனால், ரஷ்யா இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று (அக்டோபர் 13) பேசிய ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் (Dmitry Medvedev), "அமெரிக்கா டோமஹாக் ஏவுகணைகளை வழங்கினால், அது அனைவருக்கும், குறிப்பாக ட்ரம்பிற்கே மோசமான முடிவுகளை ஏற்படுத்தும்" என எச்சரித்துள்ளார்.
Tomahawk ஏவுகணைகள் அணு ஆயுதம் கொண்டுள்ளதா அல்லது சாதார ஆயுதமா என்பதை ஏவிய பிறகு வேறுபடுத்த முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது ரஷ்யாவின் பாதுகாப்பு நெருக்கடியாக மாறும் என்றும், அணு பதிலடி கூட சாத்தியமுள்ளதாக மெட்வடேவ் குறிப்பிட்டுள்ளார்.
"போர் முடிவடையாவிட்டால் Tomahawk ஏவுகணைகள் வழங்கப்படும்" என ட்ரம்ப் ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், மெட்வடேவ் இதை வெறும் "வெற்று மிரட்டல்" என விமர்சித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump Ukraine missile support, Tomahawk missiles to Ukraine, Russia nuclear warning Trump, Medvedev Trump missile threat, US-Russia tensions 2025, Ukraine long-range weapons, Zelensky Trump arms deal, US military aid Ukraine