ஜெலன்ஸ்கியை மோசமாக நடத்திய ட்ரம்ப்: அதிரடி மாற்றங்களைத் திட்டமிடும் ஜேர்மனி
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளிகைக்கு வந்த உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கியை நடத்திய விதம் கண்டு ஜேர்மனி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஆபத்தாக மாறிய கூட்டாளர்
அந்த சம்பவம் குறித்து பேசிய சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜேர்மன் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த கிளாடியா மேஜர் என்பவர், நமது முக்கிய கூட்டாளர், கூட்டாளர் போல் செயல்படாமல், ஐரோப்பாவுக்கு ஆபத்தாக மாறிவருகிறார் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது என்கிறார்.
அதாவது, ஜேர்மனியின் முக்கிய கூட்டாளரான அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு அபாயகரமான நாடாக மாறிவருகிறது என்கிறார் அவர்.
ரஷ்யா, அமெரிக்கா தொடர்பில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்தாகவேண்டிய நிலையில் ஜேர்மன் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
அமெரிக்கா இனி ஐரோப்பாவின் நம்பத்தகுந்த கூட்டாளராக இருக்காது என்கிறார் அரசியல் வல்லுநரான கார்லோ மாசலா.
ஆக, ஜேர்மனியைப் பொருத்தவரை, அமெரிக்காவையும் எதிர்பார்க்காமல், மற்ற ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பையும் நம்பியிருக்காமல், தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஜேர்மன் ராணுவத்தை வலுப்படுத்தவேண்டும் என்ற மன நிலை ஜேர்மனியில் உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |