ஈரானுக்கு எதிராக... Dark Eagle ஏவுகணையைப் பயன்படுத்த ட்ரம்பிற்கு எதிர்ப்பு
மத்திய கிழக்குக்கு அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை நகர்த்துவதற்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் தீவிர ஆலோசனை முன்னெடுக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டார்க் ஈகிள் ஏவுகணை
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு, அதிநவீன டார்க் ஈகிள் ஏவுகணையை மத்திய கிழக்கில் நிலைநிறுத்த முயன்று வருகிறது. ஈரானின் உட்பகுதியில் அமைந்துள்ள பாலிஸ்டிக் ஏவுகணை உள்கட்டமைப்பைத் தாக்க, இந்த நீண்ட தூர ஆயுதத்தைப் பயன்படுத்தலாம் என நம்புகிறது.

இதற்கு அனுமதி அளிக்கப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்தும் அதிநவீன ஏவுகணையாக இருக்கும். மட்டுமின்றி, சீனாவிலும் ரஷ்யாவிலும் இந்த ஏவுகணை பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டாலும், அமெரிக்காவில் முழு செயற்பாட்டிற்கு வரவில்லை.
மேலும், 300 மைல்களுக்கும் அதிகமான வீச்சு கொண்ட துல்லியத் தாக்குதல் ஏவுகணையின் தாக்குதல் வரம்பிற்கு அப்பால் ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் காரணமாக கூறுகின்றனர்.
மட்டுமின்றி, நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில், ட்ரம்ப் இந்த ஏவுகணைகளைக் களமிறக்கமால் இருக்க மூன்று காரணங்கள் குறிப்பிடுகின்றனர்.
கணிசமான நிதிச் சுமை
இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதற்குச் சுட்டிக்காட்டப்படும் முக்கியக் காரணங்களில் ஒன்று, ஈரானியர்களைத் தூண்டுவதன் மூலம் மோதல் தீவிரமடையும் அபாயமாகும்.

மேலும், ஈரானில் தான் ஏற்கனவே கொண்டுள்ள வான்வழி ஆதிக்கத்திற்கு அப்பால், அமெரிக்கா வேறு என்ன கூடுதல் நோக்கங்களை அடைய விரும்புகிறது என்பது தெளிவாக இல்லாததால், டார்க் ஈகிள் ஏவுகணையின் தேவை குறித்துக் கேள்விகள் அதிகரித்துள்ளது.
மூன்றாவதாக இந்த ஏவுகணைகள் கணிசமான நிதிச் சுமையையும் ஏற்படுத்துகின்றன; ஒவ்வொன்றின் விலையும் சுமார் 15 மில்லியன் டொலராகும்.

ஈரானுடனான மோதலுக்காக அமெரிக்கா ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான கோடி டொலர்களைச் செலவிட்டுள்ள நிலையில், இந்த விலை விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறக்கூடும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |