மத்திய கிழக்கும் ஐரோப்பாவும் துண்டு துண்டாகச் சிதறும்... ஈரான் தொடர்பில் ட்ரம்பின் எச்சரிக்கை
ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றிருந்தால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலிலிருந்து, இஸ்ரேல் உள்ளிட்ட வளைகுடாப் பிராந்தியத்தைக் காப்பாற்றவே, ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
தடுத்து நிறுத்தினோம்
ஈரானுக்கு எதிரானப் போருக்கு என்ன காரணம் என்பதை விளக்கவே ட்ரம்ப் இதை குறிப்பிட்டிருந்தார். ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், B2 குண்டுவீச்சு விமானங்கள் மூலம் நாம் அவர்களைத் தடுத்து நிறுத்தினோம். நாம் அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், அவர்களிடம் அணு ஆயுதம் கிடைத்திருக்கும்; இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா ஆகியவை துண்டு துண்டாகச் சிதறிப்போயிருக்கும் என்றார்.
மட்டுமின்றி, ஈரானின் இராணுவத் திறன் கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும், ஈரானியத் தலைமை பலவீனமடைந்துவிட்டதாகவும் அவர் கூறினார். மேலும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் அமெரிக்கா விரும்பியபடி முன்னேறவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அனுமதிக்கப் போவதில்லை
அத்துடன், ஈரான் விவகாரத்தில் ஒரு முடிவு தெரியாமல் அமெரிக்கா இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவராது என்றும் அவர் வலியுறுத்தினார். அமெரிக்கா முன்கூட்டியே வெளியேறி, இன்னும் மூன்று ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு பிரச்சினை மீண்டும் ஏற்பட அனுமதிக்கப் போவதில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எரிபொருள் விலை உயர்ந்துள்ளது உண்மையே என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், ஆனால், இந்த மோதல் முடிவுக்கு வரும்போது ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்ற ஆறுதல் இருக்கும் என்றார்.
ஈரானை அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதித்தால், உலகம் பெரும் ஆபத்தில் சிக்கும். எனவே, அப்படி ஒரு நிலையை அனுமதிக்க முடியாது எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |