ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க கட்டணம் வசூலிக்க ட்ரம்ப் திட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக உலகின் முக்கியமான நீரிணையான ஹார்முஸ் (Strait of Hormuz) தற்போது பெரும் பதற்றத்தில் உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “இந்த நீரிணையை அமேரிக்கா காப்பாற்றி வருகிறது. ஆனால் இதுவரை எதுவும் பெறவில்லை. இனி பணக்கார நாடுகள் இதற்காக கட்டணம் செலுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Fox & Friends நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், “நாங்கள் ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றுகிறோம். இதை ‘Guardian Angel of the Strait’ என்று அழைக்கலாம். எங்கள் படைவீரர்கள் உயிரை பணயம் வைத்து பாதுகாப்பு செய்கிறார்கள். அதற்கான செலவை நாங்கள் மட்டும் ஏற்க முடியாது” என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில், ஈரான் அரசு “அமெரிக்காவின் தாக்குதல்களால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை அனுமதி வழங்க முடியாது” என்று அறிவித்துள்ளது.
இந்த நீரிணை உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்துக்கு முக்கியமான பாதையாகும். அமெரிக்கா-ஈரான் மோதல் காரணமாக எரிபொருள் விலை மீண்டும் உயரக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
“ஈரானின் கடற்படை, விமானப்படை, ஏவுகணை திறன்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. நாங்கள் தொடர்ந்து தாக்குதலை நடத்துகிறோம்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இதனால், உலகளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலைமை, சர்வதேச வர்த்தகத்துக்கும், உலக பொருளாதாரத்திற்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |