ஈரான் உண்மையிலேயே ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கிறது..ஆனால் இவர்கள் - டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்துகிறார்.
போர்நிறுத்தம் முறியக்கூடும் அச்சம்
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களால் போர்நிறுத்தம் முறியக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.

அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும், பிராந்திய கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களை ஈரான் அச்சுறுத்தியதாகவும் ட்ரம்ப் அரசு குற்றம்சாட்டியது.
இந்த சூழலில், ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
இராஜதந்திரம் கைக்கு எட்டும் தூரத்தில்
அவர் தனது பதிவில், சமீபத்திய துப்பாக்கிச் சண்டைகள் நடந்தபோதிலும் இராஜதந்திரம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது என்றார்.
மேலும், தனது பதவிக்காலத்தின் மிகவும் அபாயகரமான வெளியுறவுக் கொள்கை நெருக்கடிகளில் ஒன்றை சமாளிப்பதை அரசியல் எதிரிகள் தனக்குக் கடினமாக்குவதாக குற்றம்சாட்டினார்.
அத்துடன் "டூமோக்ராட்டுகளுக்கும், தேசப்பற்று இல்லாத பல்வேறு குடியரசுக் கட்சியினருக்கும் இது புரியவில்லையா? அரசியல்வாதிகள் இதற்கு முன் கண்டிராத அளவில், நான் வேகமாக செயல்பட வேண்டும் அல்லது மெதுவாக செயல்பட வேண்டும் அல்லது போருக்கு செல்ல வேண்டும், அல்லது போருக்கு செல்லக்கூடாது.
அதேபோல் வேறு எதுவாக இருந்தாலும் சரி என்று மீண்டும் மீண்டும் எதிர்மறையாகக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்போது, எனது வேலையை சரியாக செய்வதும் பேச்சுவார்த்தை நடத்துவதும் எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. சற்று ஓய்வெடுங்கள், இறுதியில் எல்லாம் நல்லபடியாகவே முடியும் - அது எப்போதும் அப்படித்தான் நடக்கும்!" எனவும் கூறியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |