அவர்களால் அது நடக்கும்: தனது கொடூர மரணத்தை அச்சமூட்டும் வகையில் முன்னறிவித்த ட்ரம்ப்
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், தனது மரணம் குறித்து வெளிப்படையாக விவாதித்துள்ளார்.
கொலைப் பட்டியலில்
பழிவாங்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஈரான் தம்மைக் கொலை செய்யலாம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் கொலைப் பட்டியலில் தாம் இடம்பெற்றிருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை தனக்குச் சற்று அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன்; ஆனால் அது நீண்ட காலத்திற்கு நீடிக்காமல் போகலாம், ஏனெனில் இயல்பாகவே அப்படித்தான் நடக்கும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கியில் அவர் இருக்கும் இடத்தின் மீது ஏவுகணைகளை வீசுமாறு தெஹ்ரானில் உள்ள தீவிர மத அடிப்படைவாதிகள் வெளிப்படையாக அழைப்பு விடுத்திருந்த நிலையில், ட்ரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, இந்த வாரத் தொடக்கத்தில், அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் ட்ரம்ப் மீது மரணத்திற்கான வெகுமதியை அறிவித்தனர்.
மார்கோ ரூபியோ மற்றும் தனது அமைச்சரவையின் பிற முக்கிய அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே, ட்ரம்ப் மீண்டும் தனது மரணம் குறித்துப் பேசியுள்ளார்.
மேலும், கமேனிக்கு பதிலாக இன்னொருவர் வருவார், அவர்களும் ஒருகட்டத்தில் வெளியேற்றப்படுவார்கள். ஏன், அவர்களின் முதன்மை இலக்கு நான் என்பதால், நானும் கொல்லப்படலாம். இது அனைவருக்கும் தெரியும், நானே அவர்களின் முதன்மையான இலக்கு, ஏனென்றால் அவர்கள் அயோக்கியர்கள் என ட்ரம்ப் கொந்தளித்துள்ளார்.
ஈரான் மீதான போர் நிறுத்தத்தை ரத்து செய்துள்ள ட்ரம்ப், அந்த நாட்டின் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளார். ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் என ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இதனிடையே, திங்களன்று கமேனியின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்ட மக்களில் சிலர் ஏந்தியிருந்த பதாகையில், ட்ரம்பின் முகம் பதிக்கப்பட்டு, என்றாவது ஒரு நாள் உங்கள் தலைகள் உருளும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தெஹ்ரான் வீதிகள் வழியாகக் கமேனியின் இறுதி ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டபோது, தலைநகர் முழுவதும் 'அமெரிக்கா ஒழிக', 'இஸ்ரேல் ஒழிக' உள்ளிட்ட முழக்கங்கள் எதிரொலித்தன.
கடந்த 2000 ஆம் ஆண்டு புரட்சிகரப் படையின் தளபதி காசிம் சுலைமானியைத் தாக்கிக் கொல்லுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டதன் பின்னர், ட்ரோன் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ட்ரம்பைக் கொல்ல வேண்டும் என்ற ஈரான் நிர்வாகத்தின் திட்டம் உருவானதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பின் கீழ்
பழிவாங்கும் விதமாக, டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது முதல் பதவிக்காலத்தைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் ஆகியோரைக் கொலை செய்ய ஈரான் சதித்திட்டம் தீட்டி வருவதாக, 2024-ஆம் ஆண்டுத் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் அமெரிக்க உளவுத்துறை அவருக்குத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது.
மட்டுமின்றி, ட்ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை அமெரிக்க மண்ணில் கொலை செய்வதற்கு 300,000 டொலர் தொகையை வழங்க முன்வந்ததாக, புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உறுப்பினர் ஒருவர் மீது ஃபெடரல் அரசு சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ட்ரம்பின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் ஈரானுக்கான முன்னாள் தூதர் பிரையன் ஹூக் ஆகியோர், அரசு வழங்கும் இடைவிடாத பாதுகாப்பின் கீழ் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பென்சில்வேனியாவின் பட்லர் (Butler) நகரில் தனது உயிரைப் பறிக்கும் நிலைக்குச் சென்ற கொலை முயற்சி நடந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, ஜனாதிபதி தனது மரணம் குறித்து இவ்வாறு வெளிப்படையாக விவாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |